இவ்வாண்டின் பிற்பாதியில் முக்கிய பொருள்களின் ஏற்றுமதி எதிர்பார்த்ததைவிட மோசமாக இருப்பதால் முழு ஆண்டு ஏற்றுமதி கணிப்பை சிங்கப்பூர் குறைத்துள்ளது.
நான்காம் காலாண்டு பொருளியலை பாதிக்கும் அளவுக்கு சில துறைகள் ஏற்ற இறக்கமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் எஸ்ஜி அமைப்பு கூறியது. வெள்ளிக்கிழமை (நவம்பர் 22ஆம் தேதி) அந்த அமைப்பு வெளியிட்ட ஆகக் கடைசி காலாண்டு மறுஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டு எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 1% வளர்ச்சியடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே ஆகஸ்ட் மாதம் 4லிருந்து 5 விழுக்காடு வரை வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆய்வில் 4லிருந்து 6 விழுக்காடு வரை பொருளியல் வளர்ச்சி இருக்கும் என்பதும் குறைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாத எண்ணெய் சாரா ஏற்றுமதி எதிர்பார்க்கப்பட்டதைவிட பலவீனமாக இருந்ததை அடுத்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது. என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெளியிட்ட ஆய்வு தனது ஆகஸ்ட் மாத ஆய்வு குறித்தும் கருந்துரைத்தது. அது தனது நவம்பர் 22ஆம் தேதி மறுஆய்வில் பொருளியல் வளர்ச்சி விகித கணிப்பு இடர்பாடுகளுக்கு உட்பட்டது என்றும் ஆண்டின் பிற்பாதியில் எதிர்பார்ப்பைவிட பலவீனமான பொருளியல் வளர்ச்சி முழு ஆண்டின் வளர்ச்சி விகிதத்தை பாதிக்கும் என்பதைத் தான் சுட்டியதை நினைவுகூர்ந்தது.
“அதைத் தொடர்ந்து எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி, மருந்துப் பொருள்கள், கப்பல், படகுத் துறைகள் ஏற்ற இறக்கமாக செயல்பட்டதால், எதிர்ப்பார்ப்பைவிட பலவீனமாக இருந்தது தெரியவந்துள்ளது,” என்று மறுஆய்வு விளக்கியது.
வர்த்தகமும் மொத்தம் 5 விழுக்காடு வளர்ச்சி காணும் என்றும் அது முந்தைய கணிப்பான 5 முதல் 6 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் இருந்து குறைந்துள்ளதாக மறுஆய்வு தெளிவுபடுத்தியது.