பங்ளாதேஷின் கிழக்குப் பகுதிகளில் மிகக் கடுமையான வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் நிதித்திரட்டு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சிங்கப்பூர் அரசாங்கம் அதன் பங்கிற்கு 100,000 அமெரிக்க டாலர் (S$130,400) நிதி வழங்குகிறது.
“பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்கும் முயற்சிகளுக்கு இந்தப் பங்களிப்பு ஆதரவு வழங்கும். பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இத்தொகை உதவும்,” என்று வெளியுறவு அமைச்சு செப்டம்பர் 8ஆம் தேதியன்று தெரிவித்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் அவசரக்காலப் பணிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் 50,000 அமெரிக்க டாலர் வழங்க இருப்பதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்தது.
வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரைக் காப்பாற்ற அது நிதித்திரட்டு முயற்சியைத் தொடங்கியுள்ளது.
இந்த நிதித்திரட்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை நடத்தப்படும்.
“கடும் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், வீடுகளை இழந்து தவிப்போரைப் பற்றி நினைக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது,” என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமைச் செயலாளர் திரு பெஞ்சமின் வில்லியம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பங்ளாதேஷ் செம்பிறைச் சங்கத்துடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.