நியூசிலாந்தின் முன்னுரிமை பெற்ற நாடு சிங்கப்பூர்: பிரதமர் லக்ஸன்

சிங்கப்பூருக்கான உணவு விநியோகத்தை நியூசிலாந்து ஒருபோதும் நிறுத்தாது: பிரதமர் லக்ஸன் உறுதி

நியூசிலாந்தின் முன்னுரிமை பெற்ற நாடு சிங்கப்பூர்: பிரதமர் லக்ஸன்

2 mins read
90270d1a-f2d9-4fb0-93b5-1064331182db
நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஞாயிற்றுக்கிழமை (மே 3) சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெலிங்டன்: ஈரான் போர் காரணமாக உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவினாலும், சிங்கப்பூருக்கான உணவு விநியோகத்தை நியூசிலாந்து ஒருபோதும் நிறுத்தாது என்று அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் உறுதியளித்துள்ளார்.

அதேவேளையில், நியூசிலாந்திற்குத் தேவையான எரிபொருள் ஏற்றுமதிக்கு சிங்கப்பூர் எந்தத் தடையும் விதிக்காது என்றார் அவர்.

ஞாயிற்றுக்கிழமை (மே 3) தமது மூன்று நாள் சிங்கப்பூர் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு நியூசிலாந்துப் பிரதமர் லக்ஸன் நேர்காணல் வழங்கினார்.

கிறிஸ்டோபர் லக்ஸனின் வருகையின்போது சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையே ‘அத்தியாவசியப் பொருள்கள் வர்த்தக ஒப்பந்தம்’ (Agreement on Trade in Essential Supplies (AOTES)) கையெழுத்தாக உள்ளது.

நெருக்கடி காலங்களிலும் உணவு, எரிபொருள், மருந்துப் பொருள்களின் தடையற்ற விநியோகத்தை இந்த ஒப்பந்தம் உறுதி செய்யும்.

நியூசிலாந்திற்குத் தேவையான டீசல் உள்ளிட்ட எரிபொருளில் மூன்றில் ஒரு பங்கு சிங்கப்பூரின் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்தே கிடைக்கிறது.

அதேபோல், சிங்கப்பூரின் மொத்த உணவு இறக்குமதியில் 14 விழுக்காடு நியூசிலாந்திலிருந்து வருகிறது. இதில், பால் பொருள்கள், இறைச்சி, பழங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சிங்கப்பூர் நியூசிலாந்தின் முன்னுரிமை பெற்ற நாடு; இத்தகைய ஒப்பந்தத்தை நியூசிலாந்து வேறு எந்த நாட்டுடனும் செய்துகொள்ளவில்லை என்று திரு லக்ஸன் தெரிவித்தார்.
சிங்கப்பூர் நியூசிலாந்தின் முன்னுரிமை பெற்ற நாடு; இத்தகைய ஒப்பந்தத்தை நியூசிலாந்து வேறு எந்த நாட்டுடனும் செய்துகொள்ளவில்லை என்று திரு லக்ஸன் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“சிங்கப்பூர் நியூசிலாந்தின் முன்னுரிமை பெற்ற நாடு; இத்தகைய ஒப்பந்தத்தை நியூசிலாந்து வேறு எந்த நாட்டுடனும் செய்துகொள்ளவில்லை,” என்று லக்ஸன் குறிப்பிட்டார்.

உலக ஒழுங்கு பலமுனை அமைப்பாக மாறிவரும் சூழலில், சிங்கப்பூர், நியூசிலாந்து போன்ற சிறிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என்றார் அவர்

விதிகளை அடிப்படையாகக்கொண்ட அனைத்துலக அமைப்பை நிலைநிறுத்துவதிலும், அதனை வடிவமைப்பதிலும் இரு நாடுகளும் இணைந்து முக்கியப் பங்காற்ற முடியும் என்று திரு லக்ஸன் நம்பிக்கை தெரிவித்தார்.

ஈரான் போரால் எரிபொருள் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்தாலும், நியூசிலாந்திடம் தற்போது போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. இரு நாடுகளும் அமெரிக்கா, சீனா போன்ற பெரிய நாடுகளுடன் சுமுகமான உறவைப் பேணுவதோடு, விநியோகச் சங்கிலி மீள்திறனை மேம்படுத்த ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன.

முதல் சிங்கப்பூர் - நியூசிலாந்து தலைமைத்துவ கருத்தரங்கில் கலந்துகொள்ள சிங்கப்பூர் வரும் பிரதமர் லக்ஸன், பிரதமர் லாரன்ஸ் வோங், அதிபர் தர்மன் சண்முகரத்தினம் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவார் என்று நியூசிலாந்து அரசாங்கம் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்