காஸா மக்களுக்கு உதவ நிதி திரட்டும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்

1 mins read
4971b493-2899-48e5-b44c-e199305a6a29
திரட்டப்படும் நிதி எகிப்திய செஞ்சிலுவைச் சங்கம், பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை நடத்தும் மனிதாபிமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். - படம்: சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்

இஸ்‌ரேல் நடத்திய தாக்குதல்களில் நிலைகுலைந்துள்ள காஸா மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 28) அதன் நான்காவது நிதித்திரட்டு முயற்சியைத் தொடங்கியது.

போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் அக்டோபர் 10ஆம் தேதியன்று நடப்புக்கு வந்த பிறகு, காஸா மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தை மனிதாபிமான அமைப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.

இந்தத் தகவலை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) வெளியிட்டது.

திரட்டப்படும் நிதி எகிப்திய செஞ்சிலுவைச் சங்கம், பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை நடத்தும் மனிதாபிமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

பேனவ், கடன் அட்டை, காசோலை, நிதித்திரட்டு ஆகியவற்றுடன் 15 பினாங்கு லேனில் உள்ள செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்துக்குச் சென்றும் பொதுமக்கள் நன்கொடை வழங்கலாம்.

நன்கொடை வழங்குவதற்கான கடைசி நாள் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 26.

வழங்கப்படும் நன்கொடைத் தொகை 100 விழுக்காடு வரி விலக்கிற்குத் தகுதி பெறும் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் கூறியது.

போர் நிறுத்தம் நடப்புக்கு வந்ததிலிருந்து எகிப்திய செஞ்சிலுவைச் சங்கம் காஸாவுக்கு ஏறத்தாழ 5,700 டன் உணவுப் பொருள்கள் மற்றும் 1,400 டன் மருத்துவப் பொருள்கள், 2,500 டன் எரிபொருள் ஆகியவற்றை அனுப்பியுள்ளது.

காஸா மக்களுக்கான மனிதாபிமான உதவிக்காகச் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் இதுவரை $1.9 மில்லியன் பங்களித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்