அமெரிக்காவின் புதிய ஏஐ விதி: சிங்கப்பூர் ஆய்வு

அமெரிக்காவின் புதிய ஏஐ விதி: சிங்கப்பூர் ஆய்வு

ப்டம்: நியூயார்க் டைம்ஸ்

17 Nov 2026 - 9:34 am

1 mins read

பிலடெல்பியா: தென்கிழக்காசியத் தரவு நிலையங்கள் வழியாகச் செயற்கை நுண்ணறிவுச் (ஏஐ) சில்லுகளைச் சீனா தொலைவிலிருந்து அணுகுவதைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் புதிய விதி ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைச் சிங்கப்பூர் மதிப்பிடுகிறது.

அமெரிக்க வர்த்தகத் துறை நவம்பர் 16ஆம் தேதி இவ்விதியை வெளியிட்ட சில மணி நேரங்களில், சிங்கப்பூரின் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சும் எரிசக்தி, வர்த்தக, தொழில்துறை அமைச்சும் கூட்டறிக்கை வெளியிட்டன.

புதிய நடவடிக்கையின் விவரங்களைக் கவனமாக ஆராய்ந்து வருவதாகவும், பாதிக்கப்படும் நிறுவனங்களின் வணிகத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தைப் புரிந்துகொள்ள அவற்றுடன் பேசி வருவதாகவும் அவ்வறிக்கை கூறியது. சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு நம்பகமான அணுகலை எளிதாக்குவது குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் ஆலோசிப்பதாகவும் அறிக்கை தெரிவித்தது.

மூன்றாம் நாடுகளின் தரவு நிலையங்கள் வழி அமெரிக்கத் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் மீறப்படுவதைத் தடுக்கவே இவ்விதி கொண்டுவரப்பட்டதாக அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டது.

அரசாணையில் வெளியிடப்பட்டு 90 நாள்களில் நடப்புக்கு வரும் இவ்விதி, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனீசியா, பிரேசில் ஆகிய நாடுகளை ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்க்கும்.

இதனால் உள்ளூர், அமெரிக்கா அல்லாத நிறுவனங்களுக்குக் கடுமையான ஏற்றுமதி உரிமம் தேவைப்படும். அதேவேளை, அமேசான் வெப் சர்வீசஸ், மைக்ரோசாஃப்ட், கூகுள் ஆகிய அமெரிக்க மேகக் கணிமைச் சேவை நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

இதற்கிடையே, மெகாஸ்பீட் உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகளை இரு நாடுகளும் ஆராய்கின்றன.

குறிப்புச் சொற்கள்