அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனையில் அணியத்தக்க கருவிகளின் தரவுகளை சுகாதார பயிற்றுவிப்பாளர்களுக்கு தருவதால் வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.
ஆய்வின் முடிவில் அணியத்தக்க கருவிகள் மட்டும் வாழ்க்கைமுறை மாற்றத்திற்கு போதுமா அல்லது தரவுகளை சுகாதார பயிற்றுவிப்பாளர்களுக்கு கொடுத்து அவர்கள் தரும் பயிற்சி வாழ்க்கைமுறை மாற்றத்திற்கு முக்கியமாக உள்ளதா என்பதை ஆய்வு கண்டறியும்.
இந்த ஆய்வுத் திட்டத்தின் பெயர் ஆக்டிவேஷசன் (Activation) என்று அழைக்கப்படுகிறது.
இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் அலெக்ஸாண்டர் யிப் இந்த ஆய்வை வழிநடத்துகிறார்.
உடல்நலத்தை பாதுகாப்பது, நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களின் தாக்கத்தை குறைப்பது, சுகாதார செலவுகளை குறைப்பது உள்ளிட்டவற்றுக்கு உதவும் விதமாக இந்த ஆய்வு இருக்கும் என்று மருத்துவர் யிப் தெரிவித்தார்.
ஆக்டிவேஷசன் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அதில் குறைந்தது 1,700 பங்கேற்பாளர்களை சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்களின் வயது 21க்கும் 75க்கும் இடைபட்டு இருக்கும்.

