நிலையான குளிர்வித்தலுக்கான உலகளாவிய முயற்சிக்கு சிங்கப்பூர் ஆதரவு

2 mins read
189ddc13-1758-495c-b9ac-b75705135ebd
புதைபடிவ எரிபொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பெரிதும் நம்பியிருக்கும்போது குளிர்வித்தல் நீடிக்க முடியாததாக இருந்தாலும், இது பூமி வெப்பமயமாதல் வெளிப்பாடுகளுக்குப் பங்களிக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

பிரேசிலில் நடைபெறும் காப்30 ஐக்கிய நாட்டு நிறுவன (ஐ.நா.) பருவநிலைப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11), உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையைத் தூண்டும், நிலைத்தன்மையற்ற குளிரூட்டும் நடைமுறைகளைத் தடுக்க இன்னும் பலவற்றைச் செய்வதாக உறுதியளித்த உலகின் 185 நகரங்களில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.

புதைபடிவ எரிபொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பெரிதும் நம்பி[Ϟ]யிருக்கும்போது குளிர்வித்தல் நீடிக்க முடியாததாகிவிடும். இது பூமியை வெப்பமயமாக்கும் வெளிப்பாடுகளுக்குப் பங்களிக்கிறது. சில குளிரூட்டும் சாதனங்கள் குளிர்பதனப் பொருள்களையும் நம்பியுள்ளன. அவற்றில் சில சக்திவாய்ந்த, வெப்பத்தை உண்டாக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்கள்.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா. சுற்றுப்புறத் திட்ட அறிக்கை, வேகமாக வளர்ந்து வரும் குளிர்விப்புத் தேவையிலிருந்து பூமியை வெப்பமயமாக்கும் வாயு வெளியேற்றம், 2050ஆம் ஆண்டுக்குள் மூன்று மடங்கிற்குமேல் அதிகரிக்கும் என்றும் இதன் விளைவாக அதிக வெப்ப நிகழ்வுகள் ஏற்படும் என்றும் குறிப்பிடுகிறது.

ஆற்றல், செயல்திறனை மேம்படுத்துவதற்கும் மாசுபடுத்தும் குளிர்பதனப் பொருள்களைப் படிப்படியாக அகற்றுவதற்கும் தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், தற்போதைய நிலையில், குளிர்விப்பிலிருந்து வரும் வெப்ப வெளிப்பாடுகள் மின் கட்டமைப்புகளை மூழ்கடித்து, 2050ஆம் ஆண்டுக்குள் 7.2 பில்லியன் டன் பூமியை வெப்பமயமாக்கும் கரிம வெளிப்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்று அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

நிலையான குளிர்விப்பு மற்றும் நகர்ப்புற வெப்ப மீள்தன்மை ஆகியவற்றில் அதன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் சிங்கப்பூர் பகிர்ந்துகொள்ளும் என்று சிங்கப்பூரின் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

நிலையான குளிர்விப்பு நடவடிக்கைகளை உள்ளூர்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட பீட் தி ஹீட் (Beat the Heat) அமலாக்க இயக்கத்தை காப்30 மாநாட்டில் ஒரு புதிய ஐ.நா. முயற்சியாகத் தொடங்குவது குறித்த சிங்கப்பூரின் நிலைப்பாடு பற்றி திருவாட்டி ஃபூ கருத்துரைத்தார்.

உதாரணத்துக்கு, 2030ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் (வீவக) குடியிருப்புப் பேட்டைகளிலும் உள்ள வீவக புளோக்குகளுக்கு வெப்ப எதிரொலிப்பு வர்ணம் பூசும் ஒரு முயற்சியை சிங்கப்பூர் தொடங்கியுள்ளது. தெம்பனிசில் ஒரு முன்னோடித் திட்டம், குளிர் வண்ணப்பூச்சு சுற்றுப்புற வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் வரை குறைத்துள்ளதைக் காட்டுகிறது.

பிரேசில் தலைமையேற்று நடத்தும் காப்30 மாநாடும் ஐ.நா.வின் குளிர்விப்புக் கூட்டணியும் நவம்பர் 11 அன்று சிங்கப்பூர், ரியோ டி ஜெனிரோ, ஜகார்த்தா உள்ளிட்ட 185 நகரங்கள், 2050ஆம் ஆண்டுக்குள் குளிர்விப்பு தொடர்பான வெப்ப வெளிப்பாட்டைக் குறைப்பதற்கான அனைவருக்கும் ஏற்ற ‘பீட் தி ஹீட்’ முயற்சியில் இணையும் என்று அறிவித்தன.

குறிப்புச் சொற்கள்