தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலஸ்தீனர்களின் தாயகம் பெறும் உரிமைக்கு சிங்கப்பூர் ஆதரவு: பிரதமர்

1 mins read
db8a62a9-57a5-420d-a6b1-22069838a80c
காஸாவில் இஸ்ரேலியத் தாக்குதலுக்கு உள்ளான கட்டடத்தில் உயிர் பிழைத்தோர் தேடப்படுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

தங்களுக்கென தாய்நாடு இருக்கவேண்டும் என்ற பாலஸ்தீனர்களின் உரிமைக்கு சிங்கப்பூர் ஆதரவளிக்கிறது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இரு நாடுகள் இருக்கவேண்டும் என்ற முடிவு, பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படவேண்டும். அதுவே அமைதி தொடர்வதற்கான ஒரே தீர்வு என்று திரு வோங் குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தீர்வை எட்டுவதற்கு இரு தரப்பிலும் உள்ள தீவிரவாதக் கொள்கைகளை உடையோர் முட்டுக்கட்டையாக இருப்பது கவலையளிக்கிறது என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

“அதனால்தான், பாலஸ்தீனர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும், மேற்குக் கரையில் குடிபுகுந்த தீவிரவாதக் குழுக்களின் தலைவர்கள் மீது குறிப்பிட்ட தடை உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்கவுள்ளோம்,” என்று திரு வோங் சொன்னார்.

“தொடர்ந்து, இஸ்‌ரேலின் வாழ்வதற்குரிய உரிமையை ஏற்றுக்கொண்டு பயங்கரவாதத்தைத் திட்டவட்டமாக மறுக்கும் ஆக்கபூர்வமான அரசாங்கத்தை பாலஸ்தீனம் கொண்டிருக்கும் பட்சத்தில் அதை ஒரு நாடாக சிங்கப்பூர் அங்கீகரிக்கும்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

“காஸா போர் மிகுந்த வருத்தமளிக்கும் ஒன்று, உணர்ச்சிவசப்படச் செய்கிறது. அதேவேளை, வெளிநாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகள் உள்ளூரில் நம்மைப் பிரிக்க அனுமதிக்கக்கூடாது,” என்றும் அவர் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்