தென்கிழக்காசியாவின் புதிய ஆங்கிலிக்கன் பேராயராக சிங்கப்பூரர் டைட்டஸ் சுங்

தென்கிழக்காசியாவின் புதிய ஆங்கிலிக்கன் பேராயராக சிங்கப்பூரர் டைட்டஸ் சுங்

1 mins read
30fa72a6-3a23-411c-bb6b-35b15324fc42
சாபா ஆயர் மெல்ட்டர் டயிஸ், பேராயர் டைட்டஸ் சுங்குடன் கைகுலுக்கும் காட்சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தென்கிழக்காசியப் பகுதிக்கு ஆங்கிலிக்கன் தேவாலயத்தின் புதிய பேராயராக சிங்கப்பூரின் ஆங்கிலிக்கன் ஆயர் டாக்டர் டைட்டஸ் சுங் நியமிக்கப்பட்டார்.

செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தில் ஜனவரி 23ஆம் தேதியன்று நடந்த விழாவில் அவர் பொறுப்பேற்றார்.

சாபாவின் ஆயரான மெல்ட்டர் ஜிக்கி டாயிஸ், 2020ஆம் ஆண்டில் பேராயராக நியமிக்கப்பட்டதை அடுத்து டாக்டர் சுங், 59, தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரின் சுமார் 30,000 ஆங்கிலிக்கன் பிரிவினரை டாக்டர் சுங் முன்னெடுத்துச் செல்கிறார்.

அத்துடன் மற்ற ஆசிய நாடுகளில் சமயம்சார்ந்த பணிகளின் மூலமும் இவர் 16,600 ஆங்கிலிக்கன் பிரிவினரை வழிநடத்துவார்.

ஆங்கிலிக்கன் தேவாலயப் பகுதி 1996ஆம் அமைக்கப்பட்ட பிறகு, இப்பொறுப்பை ஏற்கும் மூன்றாவது சிங்கப்பூரர் இவர்.

குறிப்புச் சொற்கள்