சிங்கப்பூர் ஏற்றுமதி 2025 இறுதியில் வளர்ச்சி கண்டது

2 mins read
08c79a5c-64e0-43f4-ace0-bfa735319488
எண்ணெய் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி கடந்த ஆண்டு டிசம்பரில் 4.8 விழுக்காடு அதிகரித்தது. - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள் 2025ல் அதிகாரபூர்வ முன்னுரைப்புகளைவிட விரைவாக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதி மாதத்தில் சரக்குகளின் போக்குவரத்து மெதுவடைந்தபோதும் அந்த நிலை ஏற்பட்டதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் தெரிவித்தது.

எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி கடந்த ஆண்டு டிசம்பரில் 4.8 விழுக்காடு அதிகரித்தது. இதற்குமுன் அது 2.5 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடையும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்ததாக ஜனவரி 16ஆம் தேதி என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

2026ஆம் ஆண்டு முக்கிய ஏற்றுமதிகளின் வளர்ச்சி பூஜ்ஜியத்திலிருந்து இரண்டு விழுக்காடாக இருக்கும் என்று அமைப்பு கடந்த ஆண்டு நவம்பரில் முன்னுரைத்தது. வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்புக் காரணமாக மிதமான வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பரில் முக்கிய ஏற்றுமதிகள் 6.1 விழுக்காடு கூடின. புளூம்பர்க் கருத்துக் கணிப்பில் நிபுணர்கள் கணித்த 10.1 விழுக்காடு வளர்ச்சியைவிட அது குறைவு. நவம்பரில் வளர்ச்சி 11.5 விழுக்காடாகவும் அக்டோபரில் 21.1 விழுக்காடாகவும் இருந்தன.

எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதிகளில் மின்சாதனங்கள் 2024ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டு டிசம்பரில் 24.9 விழுக்காடு பெருகியது. அதற்கு முந்தைய நவம்பர் மாதத்தில் வளர்ச்சி விகிதம் 12.9ஆக இருந்தது.

மின்சாதனங்கள் அல்லாத பொருள்களின் ஏற்றுமதி கடந்த டிசம்பரில் 0.8 விழுக்காடு அதிகரித்தது. அதற்கு முந்தைய மாதம் அது 11.1 விழுக்காடாகப் பதிவானது.

நாணயம் சாரா தங்கம் 73.3 விழுக்காடு அதிகரித்தது. சிறப்பு இயந்திரக் கருவிகள் 5.4 விழுக்காடு வளர்ச்சி கண்டது. இத்தகைய காரணங்களால் மின்சாதனங்கள் அல்லாத பொருள்களின் ஏற்றுமதிகள் அதிகரித்தன.

சீனா, தைவான், மலேசியா ஆகியவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட எண்ணெய் சாரா பொருள்களின் எண்ணிக்கையும் கடந்த டிசம்பரில் அதிகரித்தது. அதேவேளை, அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங், இந்தோனீசியா, தாய்லாந்து, ஐரோப்பா ஆகியவற்றுக்கான ஏற்றுமதி சரிந்தது.

சீனாவுக்கான ஏற்றுமதி கடந்த டிசம்பரில் 17.9 விழுக்காடு அதிகரித்தது. தாய்லாந்துக்கான ஏற்றுமதி 24.3 விழுக்காடும் மலேசியாவுக்கான ஏற்றுமதி 13.3 விழுக்காடும் வளர்ந்தன.

குறிப்புச் சொற்கள்