நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் இரண்டு நகர்ப்புற புத்துயிர் திட்டங்கள் நவம்பர் மாத இறுதியில் அதன் ஐந்து ஆண்டு தவணைக்காலத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில் பெரிய அளவிலான நகர்ப்புற புத்துயிர் திட்டங்கள் இன்னும் சீரமைக்கப்பட்டு நீட்டிக்கப்பட வேண்டும் என்று தொழில் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மத்திய வர்த்தக வட்டாரத்துக்கான புத்துயிர் திட்டமும் (சிபிடிஐ), உத்திப்பூர்வ மேம்பாட்டு ஊக்குவிப்பு திட்டமும் (எஸ்டிஐ) நவம்பர் 26ஆம் தேதியோடு ஐந்து ஆண்டு காலத்தை நெருங்கியது.
அவற்றை நகர மறுசீரமைப்பு ஆணையம் மறுபரிசீலனை செய்து வருகிறது.
இதற்கிடையே அலுவலக இடங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் தக்க தருணத்தில் திட்டங்கள் பரிசீலிக்கப்படுவதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இரண்டு திட்டங்களும் 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
மத்திய வர்த்தக வட்டாரத்தில் உள்ள பழைய மற்றும் முக்கியமாக அலுவலக மேம்பாடுகளை பயன்பாட்டு கட்டடங்களாக மாற்றுவது சிபிடிஐ திட்டத்தின் நோக்கமாகும்.
அங்கு வசிக்கும் மக்கள்தொகையை அதிகரிக்க, இந்தத் திட்டம், கட்டட மேம்பாட்டாளர்களுக்கு அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கிறது. ஆனால் அலுவலகத்திற்கான இடங்களை வீடு அல்லது ஹோட்டல்களின் பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும்.
எஸ்டிஐ திட்டம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அருகில் உள்ள தளங்களின் உரிமையாளர்கள் கூட்டாக மறுமேம்பாட்டிற்கான திட்டத்தை முன்மொழிய வேண்டும். அந்த வகையில் தகுதி பெறுவதற்கான விதிமுறைகளிலிருந்து விலக்குகள் பரிசீலிக்கப்படலாம் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வர்த்தக வட்டாரம் மற்றும் ஆர்ச்சர்ட் ரோடு போன்ற கட்டமைக்கப்பட்ட பகுதிகளில் மறுமேம்பாட்டிற்கு உதவுவதால் இந்தத் திட்டங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.
அங்கு, முழுவதும் சொந்தமாக அல்லது 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் பெரும்பாலான நிலப்பகுதிகள் தனியார் மற்றும் மேம்பாட்டாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
இன்றுவரை, சிபிடிஐ திட்டத்திற்காக பெறப்பட்ட 17 விண்ணப்பங்களில் 13க்கு ஆணையம் கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இதில், மூன்று திட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன.
எஸ்டிஐ திட்டத்திற்கு, ஆணையம், தனக்குக் கிடைத்த ஒன்பது விண்ணப்பங்களில் ஏழு விண்ணப்பங்களுக்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது, அவற்றில் இரண்டு அமலாகி வருகின்றன.
சிபிடிஐ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட திட்டங்களில் முந்தைய ஏஎக்ஸ்ஏ டவர் உள்ள இடத்தில் ‘த ஸ்கைவாட்டர்ஸ்’ (The Skywaters), ஆன்சன் ரோட்டில் உள்ள முந்தைய ஃபியுஜி ஸெராக்ஸ் டவர்ஸ் இருந்த இடத்தில் நியூபோர்ட் பிளாசா ஆகியவை அடங்கும்.
எஸ்டிஐ திட்டத்தின்கீழ், ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள பழைய ஃபேபர் ஹவுஸ் அமைந்துள்ள இடத்தில் ஒரு ஹோட்டல், சென்ட்ரல் மால் மற்றும் சென்ட்ரல் ஸ்கொயர் தளங்களில் யூனியன் ஸ்குவேர் ஆகியவை மேம்பாட்டில் உள்ள திட்டங்களாகும்.