தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்போஸ்ட் விவகாரம்: சுயேச்சை விசாரணை நடத்தக் கோரிக்கை

1 mins read
fbd6c5aa-422e-4bbc-ab3e-69f0330991d0
சிங்போஸ்ட் கட்டடம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்போஸ்ட் அமைப்பு அதன் மூத்த நிர்வாகக் குழு அஉறுப்பினர்கள் மூவரைப் பதவி நீக்கம் செய்ததன் தொடர்பில் சுயேச்சையான நிபுணத்துவ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த விவகாரத்தில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை சிங்போஸ்ட்டின் பங்குதாரர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

“சிங்போஸ்டின் மூத்த நிர்வாகக் குழு அதிகாரிகள் மூவர் திடீரெனப் பதவி நீக்கம் செய்யப்பட்டது, அந்நடவடிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் மேல் நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறுவது ஆகிய நிகழ்வுகள் பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், சந்தை ஆகிய தரப்புகளுக்கிடையே முக்கியமான கேள்விகளை எழச் செய்துள்ளன,” என்று சிங்கப்பூர் செக்யூரிட்டிஸ் முதலீட்டாளர் சங்கத்தின் (Sias) தலைவரும் தலைமை அதிகாரியுமான டேவிட் ஜெரல்ட் வியாழக்கிழமையன்று (ஜனவரி 2) ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

“அவர்கள் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டது, விதிமுறைகள் பெரிய அளவில் மீறப்பட்டதைக் குறிக்கிறது. அதனால் முழுத் தகவல்களுடன் விளக்கமளிப்பது முக்கியமாகும்,” என்றார் அவர். இதன் தொடர்பில் சிங்போஸ்ட் இதுவரை வெளியிட்டுள்ள தகவல்கள், அதனைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் ஆகியவை மேலும் கேள்விகளைத்தான் எழுப்புகின்றன என்றும் பதில்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்