தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதமாக தனியார் வீடுகளை வாடகைக்கு விட்ட அறுவருக்கு $1.27 மில்லியன் அபராதம்

2 mins read
17030a69-0040-4987-9875-7f394c066bcc
தனியார் குடியிருப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக மன்றம் அதிகாரிகளிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து குற்றச்செயல் வெளிச்சத்துக்கு வந்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெட்ய்ஸ் டைம்ஸ்

சட்டவிரோதமாக 31 தனியார் குடியிருப்புகளில் குறுகிய கால தங்குமிடச் சேவை வழங்கிய கும்பல் தலைவனுக்குக் கிட்டத்தட்ட $1.14 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஜூலை மாதத்திற்கும் 2021 நவம்பருக்கும் இடையில் ராபின் கோ குவாஹுய், 41, சட்டவிரோதமாக குறுகிய கால தங்குமிடச் சேவையை வழங்க நால்வரை மாதச் சம்பளத்துக்கு சேர்த்துள்ளார் என்று திங்கட்கிழமை (செப்டம்பர் 15) நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

லிம் என் சியாங் பாண்டி, 33, சியூ லாம் யோங், 61, லோ ஆ டீ, 81, சுவா லியன் பெங், 71, ஆகிய நால்வருடன் 34 வயது ஐந்தாமவரான சோவ் யான் கிட் ராயனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரர்களான ஐவருக்கும் 2024 ஆகஸ்ட் முதல் 2025 மார்ச் வரை $8,000க்கும் $32,500க்கும் இடைப்பட்ட அபராதத் தொகையுடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது

சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ‘எஸ்ஜி ஆட்டோ’ கார் என்ற நிறுவனத்தின் ஒரே இயக்குநரான கோவுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது. 2021 ஜூலையில் இந்த நிறுவனம் ‘எஸ்ஜி பிஸ்லோன் கன்சல்டன்ட்’ என்று பெயர் மாற்றம் கண்டது.

சாவ் மற்றும் நால்வரும் வெவ்வேறு காலகட்டங்களில் ‘இசினே’, ‘எட்ரிச் குரூப்’, ‘எட் வெக்ஸ் ஹோல்டிங்ஸ்’, ‘ஏஎன்இசட் மானேஜ்மென்ட் சர்வீசஸ்’ ஆகிய நான்கு நிறுவனங்களில் இயக்குநர்களாக இருந்துள்ளனர்.

நால்வரும் நிறுவன இயக்குநர்கள் என்ற முறையில், கோ கண்டறிந்த மொத்தம் 31 தனியார் குடியிருப்புச் சொத்துகளுக்கு வாடகை ஒப்பந்தம் போட்டுள்ளதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறியது.

பின்னர், ‘ஏர்நப்’, ‘ஹோம் எவே’ போன்ற இணைய வாடகைச் சேவைத் தளங்களில் அந்த இடங்களை விளம்பரப்படுத்தி, மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்துக்கு அவற்றை கோ வாடகைக்கு விட்டுள்ளார். வாடகை மூலம் பெறப்பட்ட தொகை, கோ வைத்திருந்த பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது.

தனியார் குடியிருப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக மன்றம் அதிகாரிகளிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து குற்றச்செயல் வெளிச்சத்துக்கு வந்தது.

குறிப்புச் சொற்கள்