சிங்கப்பூரில் பெரும்பாலான வேலைகளுக்குத் தேவைப்படாது என்பதால் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்திட்டம் முதுகலைப் படிப்புகளுக்கு நீட்டிக்கப்படவில்லை கல்வி மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ளும் 40 மற்றும் அதற்குமேல் வயதுடைய பணியிடைக்கால ஊழியர்களுக்குப் படித்தொகை வழங்கும் திட்டம் அது.
“முதுகலைப் படிப்பு என்பது, வெறுமனே பட்டம் பெறுவதை ஆதரிக்காமல் இருப்பதில் அதிகாரிகள் கவனமாக உள்ளனர்,” என்று அமைச்சர் ஜன்இல் சொன்னார்.
முதுகலைப் படிப்புகளுக்கு ஆதரவளிக்கும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹமீத் ரசாக் (வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் மேற்கு குழுத் தொகுதி), கென்னத் தியோங் (அல்ஜுனிட் குழுத் தொகுதி) ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் ஜனில் பதிலளித்துப் பேசினார்.
2024ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டம், முழுநேரப் பயிற்சியின்போது வருமான இழப்பை ஓரளவு ஈடுசெய்ய உதவுகிறது. இது இளநிலைப் பட்டப்படிப்பு வரையிலான பயிற்சித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கிறது.
பணியிடைக்கால சிங்கப்பூரர்கள் தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலைப் பயிற்சித் திட்டங்களுக்கான கட்டணத்திற்குத் தங்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிரப்புதொகையிலிருந்து $4,000 வரை பயன்படுத்தலாம்.
“முதுகலைக் கல்வியில் முதலிடுவதன் அவசியம் குறித்து தனிமனிதர்கள் முடிவுசெய்ய வேண்டும். இது அதிக செலவு, அதிக வருமான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது, எனினும், இது சிங்கப்பூரில் உள்ள சிறிய எண்ணிக்கையிலான வேலைகளுக்கே பொருந்தும்,” என்றார் டாக்டர் ஜனில் கூறினார்.
துல்லிய மருத்துவம், செயற்கை நுண்ணறிவு, பசுமைப் பொருளியல் ஆகிய துறைகளைச் சிங்கப்பூர் பொருளியலின் முக்கிய வளர்ச்சித் துறைகளாக முன்னிலைப்படுத்தி துணைப் பிரதமர் கான் கிம் யோங் ஆற்றிய உரையைக் குறிப்பிட்டு பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் தியோங் கேள்வி எழுப்பியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“அவை ஆய்வு, உருவாக்கத்திற்கு மிகுந்த வாய்ப்புள்ள துறைகள். அத்தகைய வேலைகள் பெரும்பாலானவற்றுக்கு முதுகலைக் கல்வி தேவைப்படுகின்றது. அத்துறைகளில் 30 முதல் 40 விழுக்காடு வரையிலான வேலைகளுக்கு முதுகலைப் பட்டம் தேவைப்படுவதாகத் தெரிகிறது,” அவர் கூறினார்.
அதற்குப் பதிலளித்த டாக்டர் ஜனில், அதுகுறித்துப் பரிசீலிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

