எஸ்பிஎச் மீடியாவுக்கு ஆசிய அளவில் ஐந்து வலையொளி விருதுகள்

எஸ்பிஎச் மீடியாவுக்கு ஆசிய அளவில் ஐந்து வலையொளி விருதுகள்

2 mins read
01f79bbb-631e-4b97-87be-0d3faa9f519b
மொத்தமுள்ள 23 பிரிவுகளில் 13ல் எஸ்பிஎச் மீடியாவின் படைப்புகள் இறுதிப் பட்டியலுக்குத் தெரிவுசெய்யப்பட்டன.  - படம்: ஆசிய வலையொளி விருதுகள்
Google News Preferred Icon

எஸ்பிஎச் மீடியா, ஜகார்த்தாவில் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற்ற ‘ஆசிய வலையொளி விருதுகள் 2026’ நிகழ்வில், ‘சிறந்த செய்தி வலையொளி’, ‘சிறந்த நேர்காணல் வலையொளி’ உட்பட ஐந்து விருதுகளை வென்றுள்ளது. 

ரேடியோடேஸ் ஏ‌ஷியா மாநாட்டின்போது விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2023ஆம் ஆண்டு இவை ஆஸ்திரேலியாவின் ‘ரேடியோஇன்ஃபோ’ எனும் வர்த்தகப் பதிப்பால் தொடங்கப்பட்டது.

ஆசிய ஊடக, விளம்பரத் துறைகளில் வலையொளி ஊடகத்தில் பணியாற்றும் மிகச் சிறந்த தனிமனிதர்கள், குழுக்கள், அமைப்புகளை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன.

மொத்தமுள்ள 23 பிரிவுகளில் 13ல் எஸ்பிஎச்மீடியாவின் படைப்புகள் இறுதிப் பட்டியலுக்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தன. இறுதிப் பட்டியலுக்கு வந்த 70 படைப்புகளில், 14 படைப்புகள் எஸ்பிஎச்மீடியாவைச் சேர்ந்தவை. அவற்றில் 12 படைப்புகள் எஸ்பிஎச்வானொலியையும், இரண்டு படைப்புகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்தையும் சேர்ந்தவை.

ஐந்து விருதுகளில் நான்கு, ‘மணி எஃப்எம் 89.3’ அலைவரிசைக்குக் கிடைத்தன. அவையாவன:

மிஷெல் மார்ட்டின் படைக்கும் ‘மணி & மீ’ நிகழ்ச்சிக்கு ‘சிறந்த பணம் மற்றும் வணிக வலையொளி’ விருது வழங்கப்பட்டது.

‘சிறந்த புதிய வலையொளி’ விருது நஸிருல் அஸ்ரார் தயாரித்த ‘எக்ஸ்ட்ரா லார்ஜ்’ எனும் நிகழ்ச்சிக்குக் கிடைத்தது.

நீல் ஹம்ஃப்ரிஸ், ஆட்ரி சீக் வழங்கும் ‘டாக் ஆஃப் த டவுன்’ நிகழ்ச்சி, ‘சிறந்த செய்தி வலையொளி’ விருதைப் பெற்றது.

ஸியா-உல் ரவ்ஷன் படைக்கும் ‘ஸ்போர்ட்ஸ் மினிட்ஸ்’ நிகழ்ச்சிக்கு ‘சிறந்த விளையாட்டு வலையொளி’ விருது வழங்கப்பட்டது.

எஞ்சிய விருதை ‘கிஸ்92’ வானொலி வென்றது.

யுமிகோ கயாஹரா வழங்கும் ‘ஷெல்ஃப் லைஃப் வித் யுமிகோ’ நிகழ்ச்சி ‘சிறந்த நேர்காணல் வலையொளி’ விருதைப் பெற்றது.

“இந்த விருதுகள் எங்கள் வானொலி குழுக்களின் படைப்பாற்றல், திறமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்குக் கிடைத்த வலுவான அங்கீகாரம்,” என்று எஸ்பிஎச் மீடியாவின் வானொலிப் பிரிவுத் தலைவர் சிம் ஹாங் ஹுவாட் கூறினார்.

குறிப்புச் சொற்கள்