சீனாவுடனான நன்மதிப்பைக் கட்டிக்காக்க சிங்கப்பூர் அதிகம் பாடுபடவேண்டும்: திரு லீ

2 mins read
849c9af8-0131-40bd-bfc3-b2d5c23a8991
ஆறு நாள் அதிகாரத்துவ சீனப் பயணத்தின் முடிவில், ஷாங்காய் நகரில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் பேசினார். - படம்: சாவ்பாவ்

ஷாங்காய்: நிச்சமயற்ற உலகச் சூழலில் சீனாவுடனான நன்மதிப்பைக் கட்டிக்காக்க சிங்கப்பூர் கடினமாகப் பாடுபட வேண்டிய அவசியம் இருப்பதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் புதிய அதிபர் பதவி ஏற்க இருக்கும் வேளையில் அமெரிக்கா-சீனா பிளவு தொடர்பான பதற்றம் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திரு லீ, அண்மையில் அவ்விரு நாடுகளுக்கும் சென்று இருந்தார்.

சீனாவுடன் டிரம்ப் நிர்வாகம் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதைக் காண அமெரிக்க வர்த்தகர்கள் காத்திருக்கிறார்கள்.

அதேநேரம், நலிவடைந்த பொருளியலை சீர்ப்படுத்த சிறிது காலம் பிடிக்கும் என்றபோதிலும் அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேண சீனத் தலைவர்கள் விரும்புகின்றனர்.

இப்படிப்பட்ட நிச்சமயற்ற சூழலில் சீனாவுடான சிங்கப்பூரின் உறவு மதிப்புமிக்கதாக உருவெடுத்து உள்ளதாக என்றும் தமது ஆறு நாள் அதிகாரத்துவ சீனப் பயணத்தின் முடிவில் சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் திரு லீ கூறினார்.

அந்த உறவைக் கட்டிக்காக்க சிங்கப்பூர் அதிகம் பாடுபட வேண்டி உள்ளது என்றும் தாம் அடிக்கடி சீனா சென்று வருவது அதன் காரணமாகத்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் பிரதமர் என்ற முறையில் திரு லீ சீனாவுக்கு 14 முறை சென்றுள்ளார். சீனாவுக்கு அடிக்கடி வந்து செல்லும் வெளிநாட்டுத் தலைவர்களில் அவரும் ஒருவர்.

சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கான இறக்குமதி பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக கடந்த திங்கட்கிழமை டிரம்ப் அறிவித்திருந்த சூழலில் திரு லீயின் கருத்து வெளியாகி உள்ளது.

சீனாவின் இறக்குமதி பொருள்களுக்கு கூடுதலாக 10 விழுக்காடும் கனடா மற்றும் மெக்சிகோவின் பொருள்களுக்கு கூடுதலாக 25 விழுக்காடும் வரி விதிக்கப்போவதா டிரம்ப் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்