வேலைசெய்யும் மூத்தோரின் விளையாட்டுத் தேவைகள் சிறப்பாகப் பூர்த்தி செய்யப்படும்: ஸ்போர்எஸ்ஜி

வேலைசெய்யும் மூத்தோரின் விளையாட்டுத் தேவைகள் சிறப்பாகப் பூர்த்தி செய்யப்படும்: ஸ்போர்எஸ்ஜி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2026 - 9:44 pm

2 mins read

“நீண்ட காலம் பணிபுரியும் சூழலில், சுறுசுறுப்பான முதுமை குறித்த அணுகுமுறையும் மாற வேண்டும்” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் வாசகர் பிரிவுக்கு, அக்டோபர் 16ஆம் தேதி அனுப்பிய கடிதத்தை எழுதியவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

“சிங்கப்பூரர்கள் நீண்ட காலம் வாழ்ந்து, நீண்ட காலம் பணிபுரியும் நிலையில், முதியவர்கள் தங்கள் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வது அவசியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

“பணிபுரியும் மூத்த குடிமக்களுக்கு வழக்கமான வேலை நேரத்திற்கு வெளியே திட்டங்கள் தேவைப்படலாம் என்பதை ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு அங்கீகரிக்கிறது.

“ஜனவரி முதல், எங்கள் ‘ஆக்டிவ் ஹெல்த்’ பயிற்சியகங்கள் வாரநாள் மாலைகள், வார இறுதி நாள்களில் திட்டங்களை உள்ளடக்கும் வகையில் தங்கள் செயல்பாட்டு நேரத்தை நீட்டித்துள்ளன.

“இவற்றில், பங்கேற்பாளர்கள் தங்கள் சமநிலை, வலிமை, சகிப்புத்தன்மையை மேம்படுத்த உதவும் ‘பேலன்ஸ் அண்ட் மஸ்குலர் ஃபிட்னஸ் வொர்க்ஷாப்’, வயது தொடர்பான தசை நிறை, உடற்தகுதிக் குறைவுகளைச் சரிசெய்ய, மைய வலிமைப் பயிற்சிகளில் கவனம் செலுத்தும் எட்டு வாரத் திட்டமான ‘ஸ்ட்ரென்த் 1.0’ ஆகியவை அடங்கும்.

“சிங்கப்பூர்வாசிகள், நிரந்தரவாசிகள், ஆக்டிவ் ஹெல்த் திட்டக் கட்டணங்களைச் சரிக்கட்ட ‘ஆக்டிவ்எஸ்ஜி’ உதவித் தொகையைப் பயன்படுத்தலாம்.

“வலிமைப் பயிற்சித் திட்டங்களைத் தவிர, பணிபுரியும் மூத்த குடிமக்கள் தங்கள் நேர அட்டவணைகளுக்கு ஏற்றவாறு, வார நாள்களில் மாலை நேரங்களில் ‘அக்வா ஏரோபிக்ஸ்’, ‘ஸும்பா ஃபிட்னஸ்’, வார இறுதி நாள்களில் காலை நேரங்களில் ‘தைஜிக்குவான்’ உள்ளிட்ட பல்வேறு ‘ஆக்டிவ்எஸ்ஜி’ திட்டங்களையும் தேர்வு செய்யலாம்.

“தீவு முழுவதும் உள்ள 19 ‘ஆக்டிவ்எஸ்ஜி’ உடற்பயிற்சிக் கூடங்களில், மூத்த குடிமக்களுக்கு ஏற்ற ‘ஹுர்’ (HUR) இயந்திரங்கள் கிடைக்கின்றன. இது, அவர்கள் தங்கள் சொந்த வேகத்திலும் வசதிக்கேற்பவும் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கிறது.

“65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூர் குடிமக்கள் அனைத்து ‘ஆக்டிவ்எஸ்ஜி’ உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

“ஸபோர்எஸ்ஜி’ தொடர்ந்து பங்கேற்பு, தேவைகளைக் கண்காணிக்கும். மேலும், பணியில் இருப்பவர்கள் உட்பட முதியவர்களின் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில், எங்கள் நிகழ்ச்சிகளின் கால அட்டவணையையும் அவை கிடைக்கும் வாய்ப்புகளையும் மறுஆய்வு செய்யும்.

“மலிவு விலையில் உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகளை வழங்க, நாங்கள் தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து பணியாற்றுவோம்.

“விளையாட்டு, உடற்பயிற்சிகளை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதிலும், சிங்கப்பூர் மக்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஆதரவளிப்பதிலும் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்,” என்று கடிதத்துக்குப் பதில் அளித்துள்ளார் ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பின் ‘ஆக்டிவ்ஹெல்த்’ பிரிவின் இயக்குநர் ஜெனிவிவ் கோ.

குறிப்புச் சொற்கள்