தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆர்ச்சர்ட் சென்ட்ரல் : ஆறு பேரை காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றஞ்சாட்டு

1 mins read
47b7df08-9732-4a7c-949c-33e67de704c8
ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் ஜனவரி 1 ஆம் தேதி இரண்டு ஆடவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்து பாரத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் ஜனவரி 1 ஆம் தேதி இரண்டு ஆடவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்து பாரத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது.

ஏடம் ஹம்பலி செட்டொன்,30, 18 வயதான கார்மெலோ ஜோஷ்வா எமிலியோ எஸ்மோன்ட்  டி’சில்வவை தாக்கியபோது, நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் தாக்குதலை தடுக்க முயன்ற தருணத்தில் அவர்களும் தாக்கப்பட்டனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மரணம் விளைவிக்கும் ஆயுதம் ஒன்றை வைத்து காயங்கள் ஏற்படுத்தியதாக, ஏடம் ஹம்பலி செட்டொன் ஜனவரி 4 ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டார். தாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து மேலதிக தகவல்களைக்  காவல்துறை வழங்கவில்லை.  

பாதிக்கப்பட்டவர்கள் 18 வயது முதல் 30 வயதுகுட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டார்கள். 

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் கத்திக் காயங்களுக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த ஒரு நாளுக்குப் பிறகு, வணிக வளாகத்தின் 11 வது மாடியில் 200 மீட்டர் நீளத்தில் பல்வேறு இடங்களில் இரத்தக் கறைகள் காணப்பட்டன.

குறிப்புச் சொற்கள்