சிங்கப்பூர் உலகின் ஆகப் போட்டித்தன்மைமிக்க நாடு

சிங்கப்பூர் உலகின் ஆகப் போட்டித்தன்மைமிக்க நாடு

1 mins read
65aa5779-bf3c-404b-a487-f151383e81b7
-

சிங்கப்பூர் உலகின் ஆகப் போட்டித்தன்மை வாய்ந்த பொருளியல் என்று அண்மையில் வெளியிடப்பட்ட அனைத்துலகத் தரவரிசை பட்டியல் குறிப்பிடுகிறது. அந்தத் தரவரிசையில் சிங்கப்பூர் 100க்கு 84.8 புள்ளிகளைப் பெற்று அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளியது. கடந்தாண்டின் பட்டியலில் முதலிடம் பெற்ற அமெரிக்கா, இவ்வாண்டு 83.7 புள்ளிகளைப் பெற்றது.

"ஏற்கெனவே உள்ள நல்ல அடிப்படைகளிலிருந்து சிங்கப்பூர் முன்னேறியுள்ளது," என்று உலகப் பொருளியல் மன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

மதிப்பீட்டின் 12 அம்சங்களில் ஒன்றான உள்கட்டமைப்பில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது.

குடிமக்களின் எதிர்பார்க்கப்படும் சுகாதார ஆயுட்காலம், தொழிலாளர் சந்தை ஆகிய அம்சங்களிலும் சிங்கப்பூர் முதலிடம் வகித்துள்ளது.

நிதி அமைப்பு, சந்தை செயல்திறன், ஒட்டுமொத்த பொருளியலின் நிலைத்தன்மை ஆகியவற்றில் சிங்கப்பூர் நல்ல மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெற்றுள்ளது.

"பொது அமைப்புகளில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் அவை சோதனைகளுக்கும் அதிகாரத்திற்கும் ஓரளவுக்கு மட்டுமே உட்படுவது அவற்றின் செயல்பாட்டின் உயர்வான தரத்தை மட்டுப்படுத்துகிறது," என்றது உலகப் பொருளியல் மன்றத்தின் அறிக்கை.

பத்திரிக்கையாளர் சுதந்திரத்தில் சிங்கப்பூர் 124 ஆம் இடத்தில் உள்ளது. உலகப் புத்தாக்க நிறுவனமாகத் திகழ சிங்கப்பூர் தனது திறன் அடிப்படைகளை மேலும் மேம்படுத்துவதுடன் புதிய நிறுவனங்களின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கவேண்டும்.

குறிப்புச் சொற்கள்