சிறுவர்கள் பலரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆடவருக்கு 35 ஆண்டு சிறை

சிறுவர்கள் பலரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆடவருக்கு 35 ஆண்டு சிறை

1 mins read
a8f3403e-ab32-4a76-bc90-c8baaf0e1902
பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 47 சிறுவர்களை போரிஸ் துன்புறுத்தி காணொளி, படங்கள் எடுத்தது நிரூபணமானது. படம்: எஸ்திமெடிகா -

தென்கிழக்காசியாவைச் சேர்ந்த சிறுவர்கள் பலரைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக சிங்கப்பூரில் வசித்த ஆஸ்திரேலியருக்கு மெல்பர்ன் நீதிமன்றம் 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

15க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சிறுவர்கள் பலரைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதை போரிஸ் குன்சேவிட்ஸ்கி ஒப்புக்கொண்டார். பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 47 சிறுவர்களை போரிஸ் துன்புறுத்தி காணொளி, படங்கள் எடுத்தது நிரூபணமானது.

திருமணமான போரிசுக்கு ஒரு குழந்தை இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

சிறுவர்களைப் பாலியல் உறவு கொள்ள வைத்து அந்தக் காட்சிகளை அவர் காணொளி எடுத்தார்.

அவரால் பாதிக்கப்பட்ட 47 சிறுவர்களில் ஐவர் சிங்கப்பூரில் வசித்தனர்.

பரோலுக்குத் தகுதி பெறுவதற்கு முன்பு 53 வயது குன்சேவிட்ஸ்கி குறைந்தது 28 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

#சிறுவர்கள் #பாலியல்துன்புறுத்தல் #சிங்கப்பூர்_மெல்பர்ன் #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்