குறுகியகால விசாவில் சிங்கப்பூருக்கு வந்த இந்தியர்கள் நாடு திரும்ப விரும்பினால் பதிவு செய்ய தூதரகம் அழைப்பு

குறுகியகால விசாவில் சிங்கப்பூருக்கு வந்த இந்தியர்கள் நாடு திரும்ப விரும்பினால் பதிவு செய்ய தூதரகம் அழைப்பு

1 mins read
96f06556-2e99-46d6-888b-f477151ba723
பயணக் கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு, சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்கள், மாணவர்கள், ஓசிஐ அட்டை வைத்திருப்போர் ஆகியோருக்கு தனித்தனி விண்ணப்பப் படிவங்கள் தூதரகத்தின் இணையப்பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. -

குறுகிய கால விசா அல்லது சுற்றுப்ப்யண விசாவில் சிங்கப்பூருக்கு வந்த இந்தியர்கள் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் நடப்புக்கு வந்துள்ள பயணக் கட்டுப்பாடுகளால் தாயகம் திரும்ப இயலாமல் இருந்தால் தாயகம் திரும்புவதற்காக அவர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு சிங்கப்பூரில் இருக்கும் இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

எம்ப்ளாய்மென்ட் பாஸ் போன்ற வேலை அனுமதிச் சீட்டு காலாவதியாகிவிட்ட நிலையில் இருப்போர், அவர்களைச் சார்ந்திருப்போர் போன்றவர்கள் ஊருக்குத் திரும்பவேண்டிய நிலை இருந்தால் அவர்களையும் பதிவுசெய்துகொள்ளுமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பயணக் கட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு, தாயகம் திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்கள், மாணவர்கள், ஓசிஐ அட்டை வைத்திருப்போர் ஆகியோருக்கு தனித்தனி விண்ணப்பப் படிவங்கள் https://www.hcisingapore.gov.in/ என்ற இணையப்பக்கத்தில் உள்ளன.

மேல் விவரங்களுக்கு 83509921, 98683975, 98674790 என்ற எண்களில் அழைத்து தகவல் பெறலாம்.

குறிப்புச் சொற்கள்