சுடச் சுடச் செய்திகள்

கவனத்துடன், எச்சரிக்கையுடன் செயல்படும் சிங்கப்பூர் வழிபாட்டு இடங்கள்; 50 பேர் வரை அனுமதி

சிங்கப்பூரில் உள்ள தேவாலயங்கள், கோயில்கள், பள்ளிவாசல்களில் நாளை (ஜூன் 26) முதல் ஒரு நேரத்தில் 50 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்க வழிகாட்டி நெறிமுறைகள் தெரிவிக்கின்றன. 

இருந்தாலும் அவை மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கைகொள்வதாகத் தெரிகிறது. 

கத்தோலிக்க தேவாலயங்கள் ஜூலை முதல் கட்டம் கட்டமாகத் திறந்துவிடப்படும் என்று ரோமன் கத்தோலிக்க  தலைமைத்துவம் தெரிவித்துள்ளது. கூட்டு வழிபாட்டில் கலந்துகொள்வோர் தங்களைப் பதிந்துகொள்வதற்காக இந்த நிர்வாகம் myCatholic.sg என்ற புதிய இணையக் களஞ்சியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், புதிய முன்பதிவு முறை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. 

 பாதுகாப்பான சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் போன்ற சில இந்து கோயில்களில் ஒரு நேரத்தில் 30 பேர்வரைதான் அனுமதிக்கப்படக்கூடும் என்று இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாகி டி ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள ஆகப் பெரிய  புத்த ஆலயமான கோங் மெங் சான் ஃபோர் கார்க் ஸீ,   இப்போதைக்கு முதல்கட்ட வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றப்போவதாகத் தெரிவித்துள்ளது.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon