சுடச் சுடச் செய்திகள்

கொவிட்-19 தொற்றியவர்கள் சென்ற இடங்களின் பட்டியலில் ஈசூனில் உள்ள இந்துக் கோயில்

ஈசூன் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் கோயிலுக்கு கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்  (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்) சென்றதாக சுகாதார அமைச்சின் செய்தி அறிக்கை தெரிவித்தது.

கடந்த மாதம் 31ஆம் தேதி இரவு 7 மணியிலிருந்து 9 மணிவரை அவர் அந்த ஆலயத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை. 

முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon