கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் கேலாங் செராய் சந்தை, ஆர்ச்சர்டு கடைத்தொகுதிகள்

கொவிட்-19 நோயாளிகள் சென்ற இடங்களின் பட்டியலில் கேலாங் செராய் சந்தை, ஆர்ச்சர்டு கடைத்தொகுதிகள்

1 mins read
3c23eb05-457c-46f4-a015-c3f70c7edc15
ஆர்ச்சர்டில் இருக்கும்  நீ ஆன் சிட்டி, ஃபார் ஈஸ்ட் கடைத்தொக்குதி, ஃபார் ஈஸ்ட் பிளாசா, பாரகன், தி ஹீரன் ஆகிய கடைத்தொகுதிகள் அந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. படங்கள்: லியன்ஹ சாவ்பாவ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கேலாங் செராய் சந்தை, ஆர்ச்சர்டில் இருக்கும் சில கடைத்தொகுதிகள் போன்ற இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக நேற்று (ஆகஸ்ட் 29) சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

ஆர்ச்சர்டில் இருக்கும் நீ ஆன் சிட்டி, ஃபார் ஈஸ்ட் கடைத்தொக்குதி, ஃபார் ஈஸ்ட் பிளாசா, பாரகன், தி ஹீரன் ஆகிய கடைத்தொகுதிகள் அந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் 30 நிமிடங்களுக்கு மேலாக இருந்த இடங்கள், நேரம் பற்றிய விவரங்களை சுகாதார அமைச்சு அதன் இணையப்பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அந்த இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரங்களில் சென்றவர்கள் தங்களது உடல் நலனைக் கண்காணிப்பதுடன், உடல் நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக, மருத்துவரின் உதவியை நாடவேண்டும். ஆனால், அந்த இடங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை.

முழுமையான பட்டியலை சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் காணலாம்.

குறிப்புச் சொற்கள்