சிங்கப்பூரில் மற்றுமொரு ஊழியர் விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம் ஒன்று நேற்று (செப்டம்பர் 8) சுகாதார அமைச்சால் அறிவிக்கப்பட்டது.
எண் 2 சிலேத்தார் நார்த் லிங்கில் இருக்கும் S11 Dormitory @ Punggolலில் உறுதி செய்யப்பட்ட அந்தப் புதிய கிருமித்தொற்று குழுமத்தில் 13 பேருக்கு முன்பு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
நேற்று அறிவிக்கப்பட்ட 47 கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்று வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் தொடர்பானது.
இந்தியாவிலிருந்து கடந்த மாதம் 24ஆம் தேதி இங்கு வந்த ஒரு வயதுக் குழந்தைக்கு நேற்று கிருமித்தொற்று அறிவிக்கப்பட்டது.
விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் 46 பேருக்கு நேற்று கிருமித் தொற்று அறிவிக்கப்பட்டது. அவர்களில் 25 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு வாரங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் பரிசோதனைகளில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 3ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 2 ஆக இருந்தது.
ஆனால், ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் தினசரி சராசரி, கடந்த வாரம் 2 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அது 1 ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 27 பேர் உயிரிழந்தனர்.

