ஒரு மாத குழந்தையைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை

ஒரு மாத குழந்தையைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை

1 mins read
e72b07d2-8a18-42ff-837b-0e8d69eed870
-

தமது முதலாளியின் ஒரு மாதக் குழந்தையை அடித்துத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்கு ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனவுளைச்சல் காரணமாக அவ்வாறு செய்ததாக இந்தோனீசியரான 26 வயது லனா நிசாத்துல் மோனா கூறினார்,

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியன்று காலை 7.30 மணி அளவில் குழந்தையை அவர் அடித்துத் துன்புறுத்திய காட்சி அவர் பணிபுரிந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

பாதிக்கப்பட்ட ஆண் குழந்தையின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதியிலிருந்து ஹவ்காங்கில் உள்ள தமது முதலாளியின் வீட்டில் லனா பணிபுரிந்து வந்தார்.

முதலாளியின் நான்கு பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதும் வீட்டு வேலைகளைச் செய்வதும் அவரது அன்றாடப் பணிகளாக இருந்தன.

குறிப்புச் சொற்கள்