'புதிய தொடக்கத்துக்கான ஒளி'

'புதிய தொடக்கத்துக்கான ஒளி'

1 mins read
1d0ab431-697e-4bbb-a9dc-ed82da10e075
திரு ரவி ராஜசேகரன் - திருமதி மகாலெட்சுமி அசோகன் தம்பதியர், பிள்ளைகள் தீவனேஸ்வரன், லூட்டிகா நாயுடுவுடன் பூன் லே வட்டாரத்திலுள்ள தங்களது ஈரறை வாடகை வீட்டில் இந்த ஆண்டு தீபாவளியை அளவில்லா மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 3

திரு ரவி ராஜசேகரன் - திருமதி மகாலெட்சுமி அசோகன் தம்பதியர், பிள்ளைகள் தீவனேஸ்வரன், லூட்டிகா நாயுடுவுடன் பூன் லே வட்டாரத்திலுள்ள தங்களது ஈரறை வாடகை வீட்டில் இந்த ஆண்டு தீபாவளியை அளவில்லா மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

"இந்தத் தீபாவளிக்குத்தான் முதன்முறையாக எனது சொந்த வருமானத்தில் என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் புத்தாடை வாங்கித் தந்திருக்கிறேன். நாங்கள் இந்த வீட்டிற்குக் குடிவந்து நான்காண்டுகள் ஆன நிலையில், இந்த ஆண்டுதான் புதிதாகச் சாயம் பூசியுள்ளோம். வீட்டை அலங்கரித்திருக்கிறோம். பலகாரங்கள் வாங்கி இருக்கிறோம். இவற்றை எல்லாம் பார்க்கும்பொழுது தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது," என்கிறார் திரு ரவி.

மணமாகிப், பிள்ளைகள் பிறந்ததில் இருந்து தீபாவளித் திருநாளை திருமதி மகாவின் பெற்றோர் வீட்டில்தான் கொண்டாடி வந்தனர்.

இந்தத் தீபாவளியை ஒரு புதிய தொடக்கத்திற்கான ஒளியை ஏற்றும் நன்னாளாகக் கருதும் ரவி-மகா தம்பதியர் கடந்து வந்த பாதை, தாண்டி வந்த தடைகள் பற்றி மேலும் அறிய, தமிழ் முரசு நாளிதழின் நாளைய அச்சுப் பிரதியை நாடுங்கள்!

குறிப்புச் சொற்கள்