கொண்டாட்ட உணர்வைப் பறித்த கொரோனா

2 mins read
daa228d0-d262-4936-81ec-3af1143ec814
இம்முறை தீபாவளி நாள் முழுதும் குடும்பத்தினருடன் செலவிட முடிந்த மகிழ்ச்சியில் திரு தேவ் தயாளன். படம்: தேவ் தயாளன் -
multi-img1 of 2

குடும்­பத்­தி­ன­ரு­டன் சேர்ந்து தீபா­வளி­யைக் கொண்­டா­டும் தரு­ணம் திரு தேவ் தயா­ள­னுக்கு அரி­தா­கவே கிடைக்­கும். ஏனெ­னில், அவ­ரது வேலை அப்­ப­டிப்­பட்­டது.

கடந்த 27 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர் ஏர்லைன்சில் பணி­யாற்றி வரும் தலைமை விமா­னச் சிப்­பந்தி­யான திரு தேவ், கடந்­தாண்டு தீபா­வளியன்று இரவு 7 மணிக்­குத் தான் வீட்­டிற்கு வர முடிந்­தது.

இந்­நி­லை­யில், இவ்­வாண்டு நாள் முழுக்க மனைவி, மகள்­கள் இரு­வ­ரு­டன் இணைந்து தீபா­வ­ளி­யைக் கொண்­டா­டி­ய­து­டன் இவ­ரால் கோவி­லுக்­கும் சகோ­த­ரர் வீட்­டிற்­கும் சென்று வர முடிந்­தது. ஆனா­லும், வழக்­க­மான கொண்­டாட்ட உணர்வு இம்­முறை இல்லை.

கொவிட்-19 நெருக்­க­டி­யால் விமா­னத் துறை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டதே அதற்­குக் கார­ணம்.

இப்­போ­தெல்­லாம் இரு மாதங்­களுக்கு ஒரு­மு­றையே விமா­னத்­தில் சேவை வழங்க இவர் அழைக்­கப்­படு­கி­றார். ஆத­லால், பாது­கா­வல் துறை­யில் அதி­கா­ரி­யா­க­வும் பயிற்சி­யா­ள­ரா­க­வும் இருந்து நெருக்­கடி­யான சூழலை இவர் சமா­ளித்து வரு­கி­றார்.

"என் மனை­விக்­கும் மகள்­களுக்­கும் சிறந்த வாழ்க்­கையை அமைத்­துத் தர­வேண்­டும் என எப்போதும் கடப்­பாடு கொண்­டு இருக்கிறேன். அதுவே சவால்­களை எதிர்­கொள்ள எனக்கு உத்­வே­கம் அளித்து வரு­கிறது," என்­றார் திரு தேவ்.

நேரில் காண காத்திருக்கும் தம்பதி

சிங்­கப்­பூ­ர­ரான மகேஸ்­வ­ர­னும் மலே­சி­ய­ரான ஆனந்­தி­யும் ஈராண்டு­களுக்­கு­முன் திரு­மண உற­வில் இணைந்­த­னர். இங்கு வர்த்­தக மேலா­ள­ரா­கப் பணி­பு­ரி­கி­றார் 37 வயது மகேஸ்­வ­ரன். இவருடைய மனைவி ஆனந்தி, 33, ஜோகூரில் அரசு மருத்துவமனை ஒன்றில் பல் மருத்துவராக இருக்கிறார்.

சில நாள்கள் சிங்கப்பூரிலும் சில நாள்கள் மலேசியாவிலுமாக குடும்ப வாழ்க்கையை ஓட்டி வந்த இத்தம்பதி, கொவிட்-19 தொற்றுக் கட்டுப்பாடுகளால் கடந்த எட்டு மாதங்களாக ஒருவரை ஒருவர் நேரில் பார்க்க முடியவில்லை.

அதனால், தீபாவளியன்றும் திறன்பேசி மூலமாகவே ஒருவரை ஒருவர் பார்த்து, கொண்டாட வேண்டியதாயிற்று. ஆனாலும், இது தற்காலிகமே என மனத்தைத் தேற்றிக்கொண்டு, மனைவியை நேரில் காண ஆவலுடன் காத்து இருக்கிறார் திரு மகேஸ்வரன்.

குறிப்புச் சொற்கள்