ஐந்தாண்டுகளில் 29 பேர் மீது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

கடந்த ஐந்­தாண்­டு­களில் தீவி­ர­வாதப் போக்­கிற்கு மாறிய 29 பேர் மீது உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்­ச­ரும் உள்­துறை இரண்­டாம் அமைச்­ச­ரு­மான திரு­வாட்டி ஜோச­ஃபின் டியோ தெரி­வித்­துள்­ளார்.

அவர்­களில் பெரும்­பா­லா­னோர் இணை­யத் தீவி­ர­வா­தப் பிர­சா­ரம் மூல­மாக அப்­போக்­கிற்கு மாறி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

‘ஹியு­மா­னிட்டி மேட்­டர்ஸ்’ எனும் உள்­ளூர் அரசு சாரா நிறு­வ­னம், தீவி­ர­வா­தப் போக்­கிற்கு மாறு­வது தொடர்­பில் ‘சீக்­கிங் த இமாம்’ எனும் 25 நிமிட குறும்­ப­டத்தை எடுத்­தது. ஃபுராமா ரிவர்­ஃபி­ரண்ட் ஹோட்­ட­லில் நேற்று இடம்­பெற்ற அப்­ப­டத்­தின் திரை­யீட்டு விழா­வில் கலந்து­கொண்ட அமைச்­சர் டியோ, பயங்­க­ர­வாத, தீவி­ர­வாத அச்­சு­றுத்­தல்­களை அண்­ட­வி­டாதிருப்பதில் இன, சமய நல்­லி­ணக்­கத்­தின் அவ­சி­யத்­தைச் சுட்­டிக்­காட்­டி­னார்.

அண்­மை­யில், தீவி­ர­வா­தப் போக்­கிற்கு மாறி­யது, வன்­மு­றையை அல்­லது சமூ­கத்­தில் அமை­தி­யின்­மை­யைத் தூண்­டும் விதத்­தில் இணை­யத்­தில் கருத்­து­க­ளைப் பதி­விட்­டது தொடர்­பிலான சந்­தே­கத்­தின் பேரில் 23 வெளி­நாட்­ட­வர்­கள் உள்­பட 37 பேரை விசா­ரித்­த­தாக உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது. 16 வெளி­நாட்­ட­வர்­கள் அவர்­க­ளின் சொந்த நாடு­க­ளுக்­குத் திருப்பி அனுப்­பப்­பட்­ட­னர்.

தீவி­ர­வாத, பயங்­க­ர­வாத அபா­யங்­களை எதிர்­கொள்ள சமூ­கம் ஒன்­றி­ணை­வது அவ­சி­யம் எனக் கூறிய திரு­வாட்டி டியோ, அதற்கு மூன்று வழி­க­ளை முன்­வைத்­தார்.

முத­லா­வ­தாக, மற்ற சம­யங்­கள், கலா­சா­ரங்­களை ஆழ­மாக அறிந்து­கொள்ள சிங்­கப்­பூர் எல்லா முயற்சி­களை­யும் எடுக்க வேண்­டும் என்­றார் அவர்.

அடுத்­த­தாக, தீவி­ர­வா­தப் போக்­கிற்கு மாறு­வ­தைத் தடுக்­க­வும் அப்­படி வழி­த­வ­று­வோரை சமூ­கத்­தில் மீண்டும் ஒ­ருங்­கி­ணைக்­க­வும் முழு­மை­யான அணு­கு­முறை எடுக்­கப்­பட வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

இறு­தி­யாக, தீவி­ர­வா­தப் போக்கு அறி­கு­றி­க­ளுக்கு எதி­ராக சிங்­கப்­பூர் விழிப்­பு­டன் இருக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்று திரு­வாட்டி டியோ வலி­யு­றுத்­தி­னார்.

குறிப்­பிட்­ட­தொரு சம­யத்­து­டன் அல்­லது இனக்­கு­ழு­வு­டன் மட்­டும் தீவி­ர­வா­தப் போக்­கைத் தொடர்பு படுத்­தக்­கூ­டாது என்ற அவர், அதற்­குச் சான்­றாக கிறைஸ்ட்­சர்ச் பள்ளி­வா­சல் துப்­பாக்­கிச்­சூடு சம்­ப­வத்­தைச் சுட்­டிக்­காட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!