வர்த்தக நீதிமன்ற வழக்குகள் தொடர்பான புத்தகத்தை இணைந்து வெளியிட்ட சிங்கப்பூர், சீனா

இரு நாடு­க­ளுக்­கும் இடையே உள்ள புரிந்­து­ணர்­வைப் பிர­தி­ப­லிக்­கும் வகை­யில் சிங்­கப்­பூ­ரும் சீனா­வும் இணைந்து, நீதி­மன்­றத்­திற்கு வந்த வர்த்­தக வழக்­கு­கள் தொடர்­பான புத்­த­கம் ஒன்றை வெளி­யிட்டுள்­ளன.

இரண்டு நாடு­க­ளை­யும் சேர்ந்த அனைத்­து­லக வர்த்­தக வழக்­கு­கள் புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளன. ஒரு நாட்­டின் சட்­ட­திட்­டங்­க­ளை­யும் சட்­ட­திட்­டச் செயல்­மு­றை­க­ளை­யும் மற்­றொரு நாடு அறிந்­து­கொள்­வ­தில் கொண்­டுள்ள கடப்­பாட்­டுக்கு ஒரு சின்­ன­மாக இப்­புத்­த­கம் விளங்கு­கிறது.

சிங்­கப்­பூ­ரின் தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன், சீனா­வின் தலைமை நீதி­பதி ஸோ சியாங் ஆகி­யோர் காணொளி மாநா­டாக நேற்று முன்­தி­னம் நடந்த நான்­காவது சிங்­கப்­பூர்-சீன சட்ட, நீதி­மன்ற வட்­ட­மேசை கூட்­டத்­தில் புத்­த­கத்தை வெளி­யிட்­ட­னர்.

சிங்­கப்­பூர் மற்­றும் சீனா­வைச் சேர்ந்த தொகுப்­பா­ளர்­கள், நிபு­ணத்­துவ வர்­ண­னை­யா­ளர்­க­ளைக் கொண்ட குழு­வின் முயற்­சி­யில் சீனா­வின் சாலைத் திட்­டம் தொடர்­பான ­வ­ழக்­கு­கள் திரட்­டப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­தது. இரண்டு நாடு­க­ளின் வர்த்­த­கச் சட்­ட­திட்­டங்­களில் காணப்­படும் ஒற்­று­மையை எடுத்­துக்­காட்­டும் வித­மாக, இப்­புத்­த­கத்­தைப் பொது­மக்­க­ளுக்­கும் கிடைக்­கச் செய்­யும் திட்­டம் உள்­ளது.

மேலும் இந்­நி­கழ்­வில் வெளிப்­படை­யான, ஆக்­க­பூர்­வ­மான கலந்துரை­யா­ட­லில் இரண்டு தலைமை நீதி­ப­தி­களும் ஈடு­பட்­டனர். தற்­போ­துள்ள இரு­த­ரப்­புத் திட்­டங்­களை மேலும் வலு­வாக்­கு­வது, இரு­த­ரப்­புக்­கும் பயன்­த­ரும் அம்­சங்­களில் ஒத்­து­ழைப்­பது குறித்­தும் இரு­வ­ரும் பேசி­னர்.

வட்­ட­மே­சைக் கூட்­டம் 2017ஆம் ஆண்­டு­மு­தல் வரு­டாந்­திர நிகழ்­வாக நடை­பெற்று வரு­கிறது. ஆனால் இவ்­வாண்டு முதல்­மு­றை­யாக அது மெய்­நி­கர் மாநா­டாக நடந்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!