பிரிட்டனில் பணியாற்றும் சிங்கப்பூர் மருத்துவருக்கு தடுப்பூசி போடப்பட்டது

பிரிட்டனில் பணியாற்றும் சிங்கப்பூர் மருத்துவருக்கு தடுப்பூசி போடப்பட்டது

1 mins read
577528be-d4cb-4fde-ad99-3016eb77e6ac
பிரிட்டனில் ஃபைசர் நிறுவனத்தின் கொவிர்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முதல் தொகுதியினரில் சிங்கப்பூரான மருத்துவர் மார்ட்டின் டானும் ஒருவர். படம்: COURTESY OF MARTIN TAN -

பிரிட்டனில் மருத்துவராகப் பணியாற்றும் சிங்கப்பூரரான 27 வயது டாக்டர் மார்ட்டின் டான், பிரிட்டனில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற முதல் தொகுதியினருள் இடம்பெற்றார்.

உலக நாடுகளில் பிரிட்டனில்தான் கொவிட் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

இரண்டு தடுப்பூசி 'டோஸ்'களில் முதலாவதை டாக்டர் டான் சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு லண்டனில் பெற்றார்.

லண்டன், ஹாம்ஸ்டெட் நகரில் உள்ள ராயல் இலவச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட்-19 நோயாளிகளுடன் டாக்டர் டான் நேரடி தொடர்பில் இருக் கிறார்.

"புதிய வகையில் விநியோகிப்படும் இந்தப் புதிய தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்வதில் மருத்து வர்கள் உட்பட பலர் ஐயம் தெரிவித்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில், நான் கொவிட்-19 நோயாளிகளுடன் நாள்தோறும் நேரடி தொடர்பில் இருக்கிறேன். தடுப்பூசியில் உள்ள நன்மைகளைக் கருத்தில் கொண்டு, அதில் உள்ள அபாயங்களை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்," என்றும் டாக்டர் டான் கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்