ஈசூனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் படுக்கையறையில் தீ; ஒருவருக்கு தீக்காயம்

ஈசூனில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் படுக்கையறையில் தீ; ஒருவருக்கு தீக்காயம்

1 mins read
56645411-8570-4ab0-aeb7-fffa94495521
படம் / செய்தி: ஸ்டோம்ப் -

ஈசூன் ஸ்திரீட் 11ன் புளோக் எண் 146ல் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் படுக்கை அறையில் நேற்றிரவு தீப்பற்றியதில் ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

அவர் உட்பட அறுவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்ற ஐவரும் புகையை சுவாசித்ததால் சிரமத்துக்கு உள்ளானதாகக் கூறப்பட்டது.

இந்த அறுவரில் ஐவர் அந்த வீட்டின் குடியிருப்பாளர்கள்.

அந்த புளோக்கின் 12வது மாடியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு 10.10 மணியளவில் தீப்பற்றியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் கிடைத்தது.

தண்ணீரைப் பீய்ச்சியடித்ததுடன், காற்று நுரையும் தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட புளோக்கில் வசித்த மேலும் 25 குடியிருப்பாளர்கள் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீப்பற்றியதற்கான காரணம் பற்றிய விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்