தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குடும்பத்துடன் சேர்ந்து துன்புறுத்தல்: பெண்ணின் கால்விரலை இடுக்கியால் முறுக்கி முறித்தவருக்கு எட்டரை ஆண்டுகள் சிறை

1 mins read
982a7419-af42-4320-9ab7-8c06cd33c88d
தற்போது $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஹஸ்லிண்டா, மார்ச் 1ஆம் தேதியன்று தன் சிறைத் தண்டனையைத் தொடங்குவார்.  படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தங்களுக்குப் பழக்கமான, மிதமான அறிவாற்றல் குறைபாடுடைய பெண்ணை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடல்ரீதியாகத் துன்புறுத்தினர்.

அக்குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு ஏற்கெனவே தண்டனையும் விதிக்கப் பட்டது.

இன்று ஐந்தாவது நபரான 34 வயது ஹஸ்லிண்டா இஸ்மாயில் என்பவருக்கு எட்டரை ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

வேண்டுமென்றே காயம் விளைவித்தது, கால்விரல் முறியும் அளவுக்கு இடுக்கியைக் கொண்டு முறுக்கி முறித்தது தொடர்பிலான குற்றச்சாட்டுகள் ஹஸ்லிண்டா சென்ற மாதம் ஒப்புக்கொண்டார்.

தற்போது $30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஹஸ்லிண்டா, மார்ச் 1ஆம் தேதியன்று தன் சிறைத் தண்டனையைத் தொடங்குவார்.

சுடுநீரைப் பெண்ணின்மீது ஊற்றியது, சுத்தியலால் அடித்துப் பெண்ணின் மேலிரண்டு பற்களை உடைத்தது, சிறுநீர் கலந்த உணவைச் சாப்பிட வைத்தது போன்ற செயல்களையும் ஹஸ்லிண்டா செய்திருந்ததாகக் கூறப்பட்டது.

அடிமையாக நடத்தப்பட்டதுடன் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த 30 வயது பெண், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இறந்துவிடும் அபாயத்துக்கு தள்ளப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது.

8 1/2

குறிப்புச் சொற்கள்