சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது 1,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கும்

சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது 1,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கும்

1 mins read
602fdeff-2eb0-47a4-b791-52d01f255d71
சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது சிங்கப்பூரெங்கும் 1,033 தனியார் மருந்தகங்களும் 758 அரசாங்க சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்களும் இயங்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது 1,000க்கும் மேற்பட்ட தனியார் மருந்தகங்கள் திறந்திருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று அது தெரிவித்தது.

இருமல், சளி, நாவில் ருசி அறியாத நிலை, நுகரும் திறனற்ற நிலை போன்ற கொவிட்-19 அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசாங்க சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்களுக்குச் செல்லுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

நெஞ்சு வலி, முச்சுத் திணறல், கட்டுப்படுத்த முடியாத ரத்தக் கசிவு போனற மிக மோசமான, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைகளில் உள்ள விபத்து, அவசரநிலைப் பிரிவுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது சிங்கப்பூரெங்கும் 1,033 தனியார் மருந்தகங்களுடன் 758 அரசாங்க சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்களும் திறந்திருக்கும் என்று அமைச்சு கூறியது.

வழக்கமான திறப்பு நேரத்துடன் அவை செயல்படும். ஏறத்தாழ 500 அரசாங்க சுகாதாரத் தயார்நிலை மருந்தகங்களிலும் ஆறு நிலையங்களிலும் கொவிட்-19 மருத்துப் பரிசோதனை நடத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்