யூடியூப்பில் வெளியிடப்பட்ட இனவாதம், தொந்தரவு விளைவிக்கும் சம்பவங்கள் குறித்து விசாரணை

யூடியூப்பில் வெளியிடப்பட்ட இனவாதம், தொந்தரவு விளைவிக்கும் சம்பவங்கள் குறித்து விசாரணை

1 mins read
62dc4e90-8b68-4f98-bd73-494e61be529b
ரயிலில் இருக்கும் மலாய்க்காரர்களை இந்தப் பெண் கணக்கெடுத்ததாக காணொளியில் பதிவாகி உள்ளது. படம்: ரயான் கல்மானி/டுவிட்டர் -

யூடியூப் தளம் ஒன்றில் வெளியான இனவாதம் மற்றும் தொந்தரவு விளைவிக்கும் சம்பவங்கள் தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இம்மாதம் 21ஆம் தேதி கிழக்கு-மேற்கு எம்ஆர்டி வழித்தட ரயில் ஒன்றில் இருந்த பெண் ஒருவர், பயணிகளை காணொளி படம் எடுத்து அவர்களின் இனம் பற்றி கேட்டது டுவிட்டரில் காணொளியாக வெளியாகி உள்ளது. பயணிகள் தம்மைத் தொந்தரவு செய்ததாக தெரிவித்த அப்பெண் அப்போது ரயிலில் இருக்கும் மலாய்க்காரர்களை கணக்கெடுத்ததாக காணொளியில் பதிவாகி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் போலிசுக்குப் புகார்கள் வந்ததாகவும் 57 வயதுப் பெண் புலன் விசாரணைக்கு உதவி வருவதாகவும் போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் மனநிலை சோதிக்கப்பட்டு வருவதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் அறிகிறது.

குறிப்புச் சொற்கள்