புக்கிட் பாஞ்சாங்கில் ரயில் சேவை தாமதம்

புக்கிட் பாஞ்சாங்கில் ரயில் சேவை தாமதம்

1 mins read
525e77ff-8a5e-4dac-a24f-3d20a9dcd99a
புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் பாதையில் ரயில் சேவை தாமதம் ஏற்பட்டது. படம்: ஷின் மின் நாளிதழ் வாசகர் -

கியட் ஹோங் ரயில் நிலையத்திற்கு அருகே இலகு ரயில் ஓடாமல் நின்றுபோனதால் அப்பகுதியில் ரயில் சேவைகள் மூன்று மணிநேரம் தாமதமடைந்தன.

இன்று காலை 9.05 மணியளவில் புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் பாதையில் கியட் ஹோங், சவுத் வியூ நிலையங்களுக்கிடையே ரயிலில் கோளாறு ஏற்பட்டது.

ரயிலில் 48 பயணிகள் இருத்னர். அவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

சேவை தடங்கலுக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் ஃபேஸ்புக் பதிவில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

காலை 9.40 மணிக்கு எஸ்எம்ஆர்டி ஊழியர்கள் பயணிகளைத் தண்டவாளங்களின் வாயிலாக கியட் ஹோங் நிலையத்திற்கு வழிநடத்திச் சென்றனர்.

மதியம் 12.05 மணிக்கு சுவா சூ காங், புக்கிட் பாஞ்சாங் நிலையங்களுக்கிடையே ரயில் சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.