காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையில் டாக்சி ஓட்டிக்கொண்டிருந்த டாக்சி ஓட்டுநரைத் தாக்கி, உதவி செய்ய வந்த காவல்துறை அதிகாரியை உதைத்த ஆடவருக்கு 22 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாம் குடிபோதையில் இருந்ததாலும் அவசரமாகக் கழிவறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டதாலும் அவ்வாறு செய்ததாக அந்த ஆடவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தைக் காவல்துறை அதிகாரி அடைவதற்கு முன்பு 35 வயது சென் லெய் சாலையோரத்தில் மலம் கழித்தார்.
டாக்சி காலாங்-பாய லேபார் விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எவ்வித தூண்டுதலுமின்றி 73 வயது ஓட்டுநரின் தலையிலும் கழுத்திலும் சென் குத்த ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

