தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாவனைப் பயிற்சிக்கென குடிமைத் தற்காப்புப் படை புதிய சீருடை

1 mins read
6dc6ae03-4dee-4a43-8387-48540ea9b956
இந்தப் பல்லுணர்வு சீருடையானது, மெய்நிகர்த் தொழில்நுட்பத்தையும் கண்ணுக்குத் தெரியக்கூடிய பொருள்களையும் உள்ளடக்கும் ‘எக்ஸ்ஆர்’ எனப்படும் நீள்நிகர் தொழில்நுட்பப் பயன்பாட்டின் ஓர் அங்கமாக இடம்பெறுகிறது. - படம்: எஸ்பிஎச்

பாவனைப் பயிற்சிகளுக்கென சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை புதிய சீருடையை வடிவமைத்து, சோதித்துப் பார்த்து வருகிறது.

இந்தச் சீருடை மனிதப் புலன் உணர்வுகளில் ஐந்தில் நான்கை ஈடுபடுத்தும்.

எடுத்துக்காட்டாக, அனலடித்தாலும் ஒரு கார் தீப்பற்றி எரிவதால் உண்டாகும் நெடியை அச்சீருடை அணிந்திருக்கும் வீரர் உணர முடியும்.

இந்தப் பல்லுணர்வு சீருடையானது, மெய்நிகர்த் தொழில்நுட்பத்தையும் கண்ணுக்குத் தெரியக்கூடிய பொருள்களையும் உள்ளடக்கும் ‘எக்ஸ்ஆர்’ எனப்படும் நீள்நிகர் தொழில்நுட்பப் பயன்பாட்டின் ஓர் அங்கமாக இடம்பெறுகிறது.

‘எச்டிஎக்ஸ்’ எனப்படும் உள்துறைக் குழுவின் அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ‘கியூட்’ நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து உடல் முழுவதையும் மறைக்கும் இச்சீருடையைக் குடிமைத் தற்காப்புப் படை உருவாக்கியிருக்கிறது.

“மெய்நிகர், நீள்நிகர் தொழில்நுட்பங்கள் உறுதியாக பயிற்சிச் செயல்திறனை மேம்படுத்தும்,” என்று பொங்கோல் தீயணைப்பு நிலையத்தின் லெப்டினன்ட் கர்னல் ஃபூ யிங் காய் கூறினார்.

‘எச்டிஎக்ஸ்’ மனிதக் கூறுகள், நிபுணத்துவ பாவனை மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் சரவணக்குமார் கூறுகையில், உள்துறைக் குழு முழுவதும் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் சாத்தியமுள்ளது என்றார்.

குற்றம் நடந்த இடப் புலனாய்வுக்கும் பயன்படக்கூடிய இந்தத் தொழில்நுட்பம் ரத்த வாடையையும் அதிகாரிக்குத் தெரிவிக்கும் ஆற்றல் பெற்றது. 

குறிப்புச் சொற்கள்