சிண்டாவின் முதல் தொண்டூழியக் கருத்தரங்கம்

சமூகத்தின் தேவைகள் மாறி வரும் வேளையில் தொண்டூழியம், தொண்டூழியர்கள், பயனாளர்கள் தேவைக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.

இதனைக் கருத்தில் கொண்டு, தொண்டூழியர்களின் குறிப்பிட்ட திறன்களையும் நிபுணத்துவத்தையும் சார்ந்திருக்கும் தொண்டூழியத்தை ஊக்குவித்தல் வலியுறுத்தப்படுவதாக அவர் கூறினார்.

சிண்டா எனப்படும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் முதன்முதலாக நடத்தியுள்ள தொண்டூழியர் கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பித்தபோது தேசிய வளர்ச்சி, நிதித்துறை இரண்டாம் அமைச்சரும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்குத் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா உரையாற்றினார். சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பல்வேறு இந்திய நல அமைப்புகள், சமூகநல அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் கலந்துகொண்டனர். தொண்டூழியம் பற்றிய ஓர் கலந்துரையாடல் அங்கமும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

சிண்டாவின் முயற்சிகளுக்குத் தொண்டூழியம் வலுசேர்த்திருப்பதாகக் கூறிய குமாரி இந்திராணி, பல்வேறு அமைப்புகளுடன் அது கொண்டுள்ள கூட்டுறவு இந்தியச் சமூத்தின் தேவைகளை நிறைவு செய்யப் பெரிதும் உதவியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

தொண்டூழியர்களை இணைத்து மேலும் அதிகமானோருக்கு உதவ வகைசெய்யும் செயலி ஒன்றும் அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அந்தச் செயலி பதிவிறக்கம் செய்யப்படலாம் என்றது சிண்டா.

இந்தக் கருத்தரங்கு முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்ட குமாரி இந்திராணி ராஜா, பிற சமூகப் பங்காளிகளுடன் செயல்படும் தயார்நிலையையும் வளங்களின் ஒருங்கிணைப்பையும் கருத்தரங்கு காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

“சுமார் ஆறு, ஏழு ஆண்டுகள் நீடித்த பயணத்தின் முத்தாய்ப்பாக இந்தக் கருத்தரங்கு உள்ளது. இதில் நாங்கள் தொண்டூழிய அடித்தளமிட்டு, தொண்டூழியர்களுக்குத் தேவையான வளங்களை அளித்து, முறையான பயிற்சி அளித்து வாய்ப்புகளை அவர்களுடன் இணைக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.

சிறிய அமைப்புகள், பிற அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தித் தங்கள் வளங்களைப் பகிர உதவுவது இக்கருத்தரங்கின் நோக்கங்களில் ஒன்று என்றும் அவர் கூறினார்.

“இது எங்களுக்குச் சற்று காலம் எடுத்தது. அத்துடன் கொவிட்-19 இடையூறாக இருந்தது. ஆயினும், நாம் பலவற்றைச் செய்து முடித்துள்ள நிலைக்கு வந்திருக்கிறோம்,” என்றார்.

32 ஆண்டுகளாக இயங்கி வரும் சிண்டாவில் தற்போது 1,200 தொண்டூழியர்கள் இணைந்துள்ளனர். இந்தக் கருத்தரங்கின் மூலம் கூடுதலான தொண்டூழியர்களின் சேர்க்கையை விரும்புவதாக சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

சிண்டாவின் தொண்டூழியர் செயலி குறித்துப் பேசிய திரு அன்பரசு, தொண்டூழிய வாய்ப்புகளை மேலும் அதிகமானோரிடத்தில் கொண்டுசேர்க்க செயலி உதவும் என்று அவர் கூறினார்.

“உதவி தேவைப்படுவோர் சிண்டாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் அல்லது வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவராக இருக்கலாம். அவர்களுக்கு யாராவது உதவி செய்யவேண்டும். இதுதான் எங்கள் முக்கிய நோக்கம்,” என்றார்.

வேலையையும் குடும்பத்தையும் சமசீராக பார்த்துக்கொள்ளவேண்டிய இளம் நிபுணர்களுக்குத் தொண்டூழிய வாய்ப்புகளைப் பற்றி தெரிவிக்க சிண்டாவின் இந்தப் புதிய செயலி உதவும் என்று 2021ஆம் ஆண்டு முதல் சிண்டாவில் இளம் வழிகாட்டியாகத் தொண்டூழியம் புரிந்து வரும் திரு லுவோ சென் ஜுன், 34, கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!