தோ பாயோவில் காரும் சைக்கிளும் விபத்துக்கு உள்ளானதையடுத்து, சைக்கிளில் சென்ற 14 வயது சிறுவனுக்குக் காயமேற்பட்டது.
காயமடைந்த அச்சிறுவன், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான். இச்சம்பவம் தோ பாயோ லோரோங் 1ஐ நோக்கிச் செல்லும் தோ பாயோ லோரோங் 6ல் புதன்கிழமை காலை 8.45 மணியளவில் நிகழ்ந்தது.
சம்பவம் பதிவான படங்கள் எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் கண்ணாடி உடைந்திருந்த வெள்ளி நிற கெட்கோ கார் தெரிந்தது. காருக்கு முன்னால் காயமடைந்த சிறுவன் சாலையில் தலைகுப்புறக் கிடந்ததுபோல தெரிந்தது.
காருக்கு சுமார் 10 மீட்டர் அருகே நசுங்கிப்போன சைக்கிளும் ஒரு வெள்ளைக் காலணியும் காணப்பட்டன.
இச்சம்பவம் குறித்துக் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.