ஆயுதங்களால் தாக்கிக்கொண்ட அண்டை வீட்டார்

ஆயுதங்களால் தாக்கிக்கொண்ட அண்டை வீட்டார்

2 mins read
cc344009-7b93-4c5e-9340-cd3333817cbb
மாதிரிப்படம்: - பிக்சபே

மூவாண்டுகளாக பிடோக் நார்த் வீவக வீட்டில் மேல்மாடிக்காரருக்கும் கீழ் மாடிக்காரருக்கும் பிரச்சினை நிலவியது.

ஐந்தாவது மாடியில் வசித்த லாம் சீ கொங், 58 வீட்டிலிருந்து இரைச்சல் சத்தம் அடிக்கடி வந்ததால், நான்காம் மாடியில் வாழ்ந்த ஹசான் அப்துல்லாஅஷிப்லீ, 67 ஆத்திரமடைந்தார்.

கடந்த ஜனவரி 17ஆம் தேதி, அதிகாலை 1.30 மணிக்கு ஒரு தடியைக் கையிலெடுத்துக்கொண்டு, லீ வீட்டு வாசலில் கதவைத் தட்டினார்.

கதவைத் திறந்த லீயிடம், ஏன் வீட்டிலிருந்து சத்தம் எப்போதும் அதிகமாக வருகிறது என்று கேட்டுவிட்டு, வெளியே வந்து பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என்றார் அப்துல்லா.

லீ அப்துல்லாவைக் கண்டு திகைப்பாகி, தானும் உடனே சமையலறைக்குச் சென்று, கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு கதவைத்திறந்தார்.

வெளியில் கைகளில் இருந்த ஆயுதங்களால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இறுதியில் அப்துல்லா வைத்திருந்த தடியை லீ கைப்பற்றியதும் அப்துல்லா வெட்டுக்காயங்களுடன் அங்கிருந்து ஓடி, கீழே தன் வீட்டுக்குத் திரும்பினார்.

பிறகு காவல் துறை வந்ததும் இருவரும் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். தலை, உதடு, கை ஆகிய இடங்களில் அப்துல்லாவுக்கு வெட்டுக்காயங்கள். லீக்கு தலையில் இரத்தக்காயம்.

குற்றத்தை இருவரும் ஒப்புக்கொண்டனர் என்பதால், அப்துல்லாவுக்கு ஒரு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. லீ வழக்கை வாதாடுவதால், அவரது தீர்ப்பு ஆக்டோபர் 31க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காயங்கள் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒருவர் தாக்கப்படும் குற்றத்துக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை, $5,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்