தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிம் அட்டை மோசடி; 13 பேரிடம் விசாரணை

1 mins read
2f84f559-56ca-4372-a493-972c78f1d8a5
கைப்பேசிக் கடை ஒன்றில் காவல்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

கைப்பேசிக் கடைகளைக் குறிவைத்து தீவு முழுவதும் நடத்தப்பட்ட இரண்டு நாள் திடீர் சோதனையில் சிம் அட்டைகளைப் பதிவதில் மோசடி செய்ததற்காக 13 பேர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களில் ஆடவர்கள் நால்வர், 25 வயதுக்கும் 44 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். சிம் அட்டை பதிவில் மோசடி செய்ததன் சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

எஞ்சிய ஆறு ஆடவர்களும் மூன்று மாதர்களும் காவல்துறையினரின் விசாரணைக்கு உதவி வருகின்றனர். அவர்கள் 23 வயதுக்கும் 57 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

திடீர் சோதனை கடந்த வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் நடத்தப்பட்டது.

மோசடித் தடுப்பு தளபத்திய அலுவலகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் ஈசூன், அங் மோ கியோ, உட்லண்டஸ், அட்மிரல்டி, பீச் ரோடு, சிலிகி ரோடு, இண்டஸ் ரோடு ஆகிய இடங்களில் உள்ள எட்டு கைப்பேசிக் கடைகளில் சோதனை நடத்தினர்.

அதில் கைப்பேசிகளும் சிம் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிம் அட்டைகளுக்கான பதிவுத் தகவலை உள்ளடக்கிய கணினி முறையைக் கைப்பேசிக் கடைக்காரர்கள் பயன்படுத்தியதாகக் காவல்துறையினர் நம்புகின்றனர்.

விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்