வேலையிட மரணம்: மூன்று நிறுவனங்களுக்கு அபராதம்

வாகனங்கள், இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வேலையிட விபத்துகள், ஊழியர்கள் உயரத்திலிருந்து விழும் சம்பவங்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ள மூன்று நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் முற்பாதியில் இத்தகைய சம்பவங்கள்தான் வேலையிட மரணங்களுக்கும் வேலையிடங்களில் ஊழியர்கள் காயமடைவதற்கும் முக்கியக் காரணங்களாக இருந்திருக்கின்றன.

அடிப்படை வேலை நடைமுறைகள் இல்லாதது, ஊழியர்களுக்குத் தகுந்த பயிற்சி வழங்கப்படாதது போன்ற குறைபாடுகளால் இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடப்பதாக புதன்கிழமையன்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 14 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் ஏழு வாகனங்களால் ஏற்பட்டவை; நால்வர் உயரத்திலிருந்து விழுந்து மாண்டனர்.

மேலும், அதே காலகட்டத்தில் வேலையிடங்களில் ஊழியர்கள் மோசமாகக் காயமுற்ற சம்பவங்களின் எண்ணிக்கை 311ஆகப் பதிவானது. அவற்றில் 46 சம்பவங்கள் இயந்திரங்கள் சார்ந்தவை; 42 பேர் உயரத்திலிருந்து விழுந்து காயமுற்றனர்; 14 சம்பவங்கள் வாகனங்கள் சம்பந்தப்பட்டவை.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியன்று ‘சியூஸ் அக்ரிகல்ச்சர்ஸ்’ கோழிப் பண்ணை நிறுவனத்தைச் சேர்ந்த லிம் தெக் ஹுவாட் எனும் ஊழியர்மீது லாரி ஏறியதால் அவர் உயிரிழந்தார். நியோ தியூ சாலையில் உள்ள அந்நிறுவனத்துக்குச் சொந்தமான பண்ணையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதியன்று அந்நிறுவனத்துக்கு 185,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

வாகனங்களால் ஊழியர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் போன்றவற்றை அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது, போக்குவரத்துக் கட்டுப்பாட்டு முறைகளில் ஊழியர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிக்காதது போன்ற காரணங்களுக்காக சியூஸ் அக்ரிகல்ச்சர்ஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஊழியர் ஒருவர் மாண்டதற்காக கழிவு உலோக (ஸ்கிராப் மெட்டல்) நிறுவனமான கிம் ஹொக் கார்ப்பரே‌ஷன் நிறுவனத்துக்கு அக்டோபர் மாதம் 13ஆம் தேதியன்று அபராதம் விதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று இயந்திரம் சம்பந்தப்பட்ட வேலையிடச் சம்பவத்தில் கருப்பையா செல்வராஜ் என்ற ஊழியர் சம்பவ இடத்திலிலேயே மாண்டார்.

போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காதது, ஊழியர்களுக்குத் தகுந்த பயிற்சியளிக்காதது போன்ற காரணங்களுக்காக கிம் ஹொக் கார்ப்பரே‌ஷனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

2019 மே ஒன்பதாம் தேதியன்று மூன்று மாடி தரைவீட்டில் கண்ணாடித் தகடுகளைப் பொருத்திக்கொண்டிருந்தபோது செ சீ ஏ என்ற ஊழியர் 3.2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து சம்பவ இடத்திலேயே மாண்டார்.

கண்ணாடித் தகடுகளைப் பொருத்துவது உள்ளிட்ட பணிகளை ஃபிளக்ஸ் ஜெனரல் கட்டுமான நிறுவனம், எஸ்கே ஹேக்கிங் எனும் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. எஸ்கே ஹேக்கிங், திரு செ சீ ஏ பணியாற்றிய வெரே கிளாஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனத்தை ஈடுபடுத்தியது.

அக்டோபர் 13ஆம் தேதியன்று ஃபிளக்ஸ் ஜெனரல் நிறுவனத்துக்கு 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது. எஸ்கே ஜெனரல் நிறுனத்தால் பணிகளைச் சரியாக மேற்கொள்ளமுடியுமா என்பதை உறுதிப்படுத்தாதது போன்ற காரணங்களுக்காக அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!