தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விடாமுயற்சிக்குப் பரிசு; இலவசமாக மான்செஸ்டர் செல்லும் மாணவர்கள்

1 mins read
dcd06e03-974d-48f8-ab31-52e84bc2121a
இலவசப் பயணப் பரிசைப் பெற்ற மாணவர்களுடன் திரு கியட் லிம் (கறுப்பு சட்டை அணிந்திருப்பவர்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

விடாமுயற்சியுடன் படிப்பில் தங்களை மேம்படுத்திக்கொள்ள முழுவீச்சில் இறங்கிய எட்டு மாணவர்களுக்கு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு இலவசமாகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் நான்காம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரை அவர்கள் மான்செஸ்டருக்குச் செல்வர்.

அங்கு இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட் அதன் சொந்தத் திடலான ஓல்ட் டிராஃபர்டில் விளையாடவிருக்கும் ஆட்டத்துக்கான நுழைவுச்சீட்டுகளை மாணவர்கள் பெறுவர்.

அதோடு, பேலஸ் தியேட்டர் மான்செஸ்டர் அரங்கில் நடைபெறவுள்ள ஹேமில்டன் இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளும் அவர்களுக்கு வழங்கப்படும். ஓர்ட்ஸால் அரங்கம், அறிவியல், தொழில்துறை கண்காட்சி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவர்.

மாணவர்களுக்கான பயணச் செலவை சிங்கப்பூர் செல்வந்தர் பீட்டர் லிம், அவரது மகன் கியட் லிம் இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். மரின் பரேட் குழுத்தொகுதியின் சிறுவர், இளையர் நிலையமான ‘தி ஹட்’ இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இளம் தலைவர்களை ஊக்குவிப்பது இந்த ஏற்பாட்டின் இலக்கு.

ஐந்திலிருந்து 17 வயதுக்கு உட்பட்ட வசதி குறைந்த பின்னணியிலிருந்து வரும் சிறுவர்களுக்கும் இளையர்களுக்கும் ‘தி ஹட்’ ஆதரவளிக்கிறது. அங்கு மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள அமைச்சருமான டான் சீ லெங் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்