மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூட வழக்கில் தொடர்புடைய இரண்டாவது ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூட வழக்கில் தொடர்புடைய இரண்டாவது ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

1 mins read
ded9d9f1-63a4-4e84-b2d9-0b73d298bff8
ஹுங் ஜுங்-ஹாவ் தன்மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளை, டிசம்பர் 6ஆம் தேதி ஒப்புக்கொண்டார். - படம்: சாவ்பாவ்

மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுக் குழுவுடன் தொடர்பிருப்பதாக தைவானிய ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதிக்கும் 23ஆம் தேதிக்கும் இடையில் மொத்தம் 433,730 வெள்ளியை அந்தக் குழு வென்றது.

28 வயதாகும் ஹுங் ஜுங்-ஹாவ், சிங்கப்பூரில் அந்த வழக்கின் தொடர்பில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட இரண்டாவது நபராவார்.

சூதாட்டக்கூடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை, டிசம்பர் 6ஆம் தேதி, ஹுங் ஒப்புக்கொண்டார். ஆனால் மோசடி செய்த பணத்தை அவர் திருப்பித் தரவில்லை.

ஹுங்கிற்கு டிசம்பர் 28ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பரில் இதே வழக்கில் தொடர்புடைய 35 வயது மலேசியர் டான் கியன் யிக்கு மூன்று ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்