தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்-புருணை அணுக்க உறவை மறுஉறுதிப்படுத்திய பிரதமர் லீ

1 mins read
e3f6acb0-1666-4166-b8cc-9a6b1e6b0b51
பிரதமர் லீ சியன் லூங், புருணை சுல்தான் ஹசனல் போல்கியா (வலது) இருவரும் ஜனவரி 15ஆம் தேதி, சுல்தானின் அரண்மனையில் சந்தித்தனர். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

பிரதமர் லீ சியன் லூங், ஜனவரி 15ஆம் தேதி, புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவைச் சந்தித்தார்.

பண்டார் ஸ்ரீ பகவானில் உள்ள இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் சுல்தானைச் சந்தித்தபோது, இருநாட்டு உறவு, அணுக்கமான பங்காளித்துவம் ஆகியவை தொடர்பில் சிங்கப்பூரின் கடப்பாட்டைப் பிரதமர் லீ மறுஉறுதிப்படுத்தினார்.

இரு நாடுகளுக்கு இடையே அரசதந்திர உறவு தொடங்கி இவ்வாண்டுடன் 40 ஆண்டுகள் நிறைவுபெறுவதைப் பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

“இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவு ஆழமானது. அமரர்களான திரு லீ குவான் இயூ, சுல்தான் ஓமர் அலி சைஃபுதீன் இருவரின் காலத்திலிருந்தே இத்தகைய உறவு நிலவுகிறது,” என்று திரு லீ கூறினார்.

அடுத்த தலைமுறைத் தலைவர்கள் இந்த நட்பை மேம்படுத்தி இரு நாடுகளையும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவர் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் அவர் சொன்னார்.

புருணை இளவரசர் அப்துல் மட்டீன் - யாங் மூலியா அனிஷா ரோஸ்னா இருவரின் மணவிழாவில் பங்கேற்கப் பிரதமர் லீ புருணை சென்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்