தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1,451 மின்சார வேன்கள் பதிவு

1 mins read
983f7af0-da97-42cd-9063-5d13a4257380
சீன நிறுவனங்கள் உற்பத்தி செய்த மின்சார வேன்கள் சென்ற ஆண்டு ஆக அதிக எண்ணிக்கையில் பதிவுசெய்யப்பட்டன. - கோப்புப் படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சென்ற ஆண்டு 1,451 மின்சார வேன் வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டன.

அதிக எடை இல்லாத பொருள்களை ஏந்தும் சரக்கு வாகனப் பதிவுகளில் அந்த எண்ணிக்கை 52.6 விழுக்காடாகும்.

சென்ற ஆண்டு பதிவுசெய்யப்பட்ட வேன்களில் 10ல் ஏழு சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்தவை. இதர வேன்கள் ஐரோப்பா அல்லது ஜப்பானைச் சேர்ந்தவை.

பயணிகளும் சரக்குகளும் ஏற்றப்பட்ட பிறகு இந்த மின்சார வேன்களின் அதிகபட்ச எடை 3.5 டன்களைத் தொடக்கூடும்.

சென்ற ஆண்டு சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வர்த்தக மின்சார வாகனங்களில் 43.4 விழுக்காடு மின்சார வேன்களாகும். கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்டவை வர்த்தக மின்சார வாகனங்களில் அடங்கும்.

21.3 விழுக்காடு மின்சார வேன்கள் சீனாவின் பிஒய்டி நிறுவனம் உற்பத்தி செய்தவை. அந்நிறுவனத்தின் மின்சார வேன்கள்தான் ஆக அதிகமாகப் பதிவுசெய்யப்பட்டன.

அதற்கு அடுத்த நிலையில் சீனாவின் ‌‌ஷினரே நிறுவனம் உற்பத்தி செய்த மின்சார வேன்கள் வந்தன.

சீன நிறுவனங்கள் உற்பத்தி செய்யாத இதர மின்சார வேன்களில் பிரான்சின் சிட்ரன் நிறுவனத்துக்குச் சொந்தமானவை ஆக அதிக எண்ணிக்கையில் பதிவுசெய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்