தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரு கார்களுடன் விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள் தீப்பிடித்தது; இருவர் மருத்துவமனையில்

1 mins read
14846b26-48e1-4cda-8b11-53b9d7b064d1
தீப்பற்றி எரிந்த மோட்டார்சைக்கிள். - படம்: சாவ்பாவ்

இருவர் பயணம் செய்த மோட்டார்சைக்கிள், இரண்டு கார்களுடன் விபத்துக்குள்ளானதில் அந்த மோட்டார்சைக்கிள் சாலை நடுவே தீப்பற்றி எரிந்தது.

பிப்ரவரி 21ஆம் தேதியன்று காலை 9 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் 20 வயது ஆண் மோட்டார்சைக்கிளோட்டி, 22 வயதுடைய பெண் பயணி ஆகிய இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலைப் பகுதியில் தீச்சம்பவம் ஏற்பட்டிருப்பதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்குமுன் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் சாலைப் போக்குவரத்து அதிகாரிகள் நெருப்பை அணைத்துவிட்டார்கள்.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடந்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்