லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம்

லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப்பிக்கலாம்

1 mins read
bea995e9-d5cb-4257-babc-f4c20f754367
‘லிம் கிம் சான் நினைவு’ கல்வி உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்கு விண்­ணப்­பிக்­கக் கடைசி நாள் ஏப்­ரல் 30. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மாதாந்தர குடும்ப வரு­மா­னம் 5,000 வெள்ளி அல்­லது அதற்­குக் கீழ் ஈட்­டக்­கூ­டிய சிங்­கப்­பூர் குடி­மக்­கள் உள்­ளூர் பல்­க­லைக்கழ­கங்­களில் முழு­நேர மொழி­யி­யல் மற்­றும் மனி­த­நே­யப் பட்டப்படிப்புகளுக்கான உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்கு விண்­ணப்­பிக்­க­லாம்.

இதற்கு முறி பத்திர கடப்பாடு இல்லை. இந்த ‘லிம் கிம் சான்’ நினைவு கல்வி உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்கு விண்­ணப்­பிக்­கக் கடைசி நாள் ஏப்­ரல் 30.

விண்ணப்பத்தை இணையம் வழி சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் மாதம் விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தப்படும்.

எஸ்­பிஎச் அற­நி­று­வ­னம் நிதி ஆத­ரவு வழங்­கும் இந்த உப­கா­ரச் சம்­ப­ளம் 2006ஆம் ஆண்டு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் முதல் நிதி அமைச்­ச­ரான, காலஞ்­சென்ற லிம் கிம் சான் பரிந்­து­ரை­யின் பேரில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட இந்த கல்வி உப­கா­ரச் சம்­பளம் மூலம் இது­வரை 171 மாண­வர்­கள் பல­ன் அடைந்து உள்ளனர்.

படிப்புச் செலவுகளையும் தேர்வுக் கட்டணங்களையும் முழுமையாகச் செலுத்த இந்த உபகாரச் சம்பளம் உதவும். உபகாரச் சம்பளத்தில் வாழ்வாதார செலவுக்காக ஆண்டுக்கு 2,000 வெள்ளியும் புத்தகச் செலவுக்காக 300 வெள்ளியும் அதில் அடங்கும்.

திரு லிம் 1988ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் நிர்வாகத் தலைவராகச் சேவையாற்றினார்.

குறிப்புச் சொற்கள்