காஸாவிற்கு மூன்றாவது முறையாக உதவிப்பொருள்களை அனுப்பிய சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஆகாயப்படை வான்வழி நிவாரணப்பொருள் விநியோகத்தில் ஈடுபடவிருக்கிறது

சிங்கப்பூர் மூன்றாவது முறையாக காஸாவிற்கு மனிதநேய உதவிப்பொருள்களை மார்ச் 15ஆம் தேதி அனுப்பியுள்ளது.

சிங்கப்பூர் ஆகாயப்படை விரைவில் ஜோர்தானுக்கு வெளியே வான்வழி நிவாரணப்பொருள் விநியோகத்தில் ஈடுபடவிருக்கிறது.

மனிதநேய உதவிப் பொருள்களை விநியோகிக்கும் பணிக்காக சிங்கப்பூர் ஆகாயப்படையின் வீரர்கள் 69 பேருடன், இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சு மார்ச் 15ஆம் தேதி தெரிவித்தது.

இரு விமானங்களும் மார்ச் 15ஆம் தேதி காலையில் புறப்பட்டுச் சென்றன.

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அந்த உதவிப்பொருள்களை ஜோர்தானிய அரசாங்கத்திடம் ஒப்படைப்பார். மார்ச் 16, 17 ஆகிய தேதிகளில் அமைச்சர் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு அம்மான் செல்வதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனின் பயணம், சிங்கப்பூருக்கும் மத்திய கிழக்கிலுள்ள பங்காளித்துவ நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மறுஉறுதிப்படுத்தும் விதமாக அமைகிறது. வலுவான உறவுகளால்தான் சிங்கப்பூர் சரியான நேரத்தில் மனித நேய உதவிகளை காஸாவிலுள்ள பொதுமக்களுக்கு விநியோகிப்பது சாத்தியமாகியுள்ளது என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

ஜோர்தானிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சி-130 விமானம் அங்கேயே தங்கி, ஜோர்தானிய ஆயுதப்படைகளின் உதவியோடு உதவிப்பொருள்களை வான்வழி விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் என்று அது கூறியது.

ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவிற்கு எழுதிய கடிதத்தில், சிங்கப்பூர் காஸாவிற்கு மனிதநேய உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தமைக்கு அந்நாட்டு அரசாங்கத்திற்கு சிங்கப்பூர் அரசாங்கத்தின் பாராட்டுதல்களைப் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துக்கொண்டார்.

வெகுநாள் நீடிக்கும் இஸ்‌ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சியில், மன்னர் அப்துல்லாவின் துடிப்பான தலைமைத்துவத்தின் பங்களிப்பைப் பிரதமர் லீ தமது கடிதத்தில் புகழ்ந்துரைத்தார்.

தனிப் பாலஸ்தீன நாடு எனும் தீர்வு குறித்த சிங்கப்பூரின் நிலைப்பாட்டைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். ஐக்கிய நாட்டுப் பாதுகாப்புச் சபை தீர்மானங்களுக்கு ஏற்ப, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே நிலையான அமைதிக்கு அதுவே சிறந்த வழி என்றார் அவர்.

காஸாவிலுள்ள பொதுமக்களுக்கு உதவ, தன்னால் ஆன அனைத்தையும் சிங்கப்பூர் செய்யும் என்று பிரதமர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடன் மனிதவள, தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது, வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் ஜோர்தான் செல்வர் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!